செய்திகள் :

'இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு...' - தேர்தல் சர்ச்சைக்கு தவெக ஆதரவு முஸ்தபா விளக்கம்

post image

தவெகவின் 'ஒரே' கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார்.

முஸ்தபா
முஸ்தபா

முஸ்தபா கூறியதாவது, 'அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம்.

எந்த இஸ்லாமிய அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இஸ்லாமியர்கள் கணிசமாக இருந்தும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளில் எங்களுக்கு வாய்ப்பு கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. அதை முதலில் கட்சிக்குள் இருந்து அமல்படுத்துங்கள் என தவெகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

முஸ்தபா
முஸ்தபா

23 எம்.எல்.ஏக்கள் இடங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க சொல்கிறோம். இதுதான் எங்களின் கொள்கை. இதன்படியே நாங்கள் செயல்பட விரும்புகிறோம். தவெக கூட்டணி பேச குழு அமைக்கும் போது இதையெல்லாம் பேசி முடிவெடுப்போம்' என்றார்.

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "நுழைவு... மேலும் பார்க்க

சங்ககிரி: பெரும் வரலாற்றை தாங்கி நிற்கும் மலைக்கோட்டை; மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளமாக மாற்றப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் அமைந்துள்ள சங்ககிரி கோட்டை பல்வேறு இந்திய மன்னர்களாலும் ஆங்கிலேயர்களும் ஆளப்பட்ட பழைமைவாய்ந்த தமிழ்நாட்டின் உயரமான கோட்டைகளில் ஒன்றாக, இன்று இந்திய தொல்லியல் துறை கட்ட... மேலும் பார்க்க

'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழ... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' - நிகிதா பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட... மேலும் பார்க்க

`நிச்சயதார்த்தத்திலும் நீண்ட ஆலோசனை; கார்கே மனதை கரைத்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் `டீல்' பின்னணி

“நீண்ட இழுபறி , விமர்சனங்கள், பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த காங்கிரஸ் - தி.மு. க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நான்கு மண... மேலும் பார்க்க