செய்திகள் :

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

post image

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின.

முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்.

இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தாக்க முடியாத ஈரான், அவர்களைப் பழிவாங்க தங்களைச் சுற்றி இருக்கும் அரபு நாடுகளைத்தான் தாக்கி வருகின்றது.

கரோலின் லீவிட்
கரோலின் லீவிட்

செலவுகள்...

இந்தப் போர் முடிவுக்கு வர ஈரான் வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – ‘இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்ய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’.

இன்னொரு பக்கம், இந்தப் போரினால் அமெரிக்காவும் பல சேதங்களைச் சந்தித்துள்ளது... அதிக செலவுகளும் ஆகியுள்ளன.

இந்தச் செலவுகளை ஈடுசெய்ய அரபு நாடுகளிடம் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணம் கேட்பாரா என்று நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.

பதில்

இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் கரோலின் லீவிட், “ஈரான் போர் செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளை அழைப்பதில் அதிபர் ஆர்வாமாகத்தான் உள்ளார்.

இப்படி ஒரு ஐடியா அவருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது குறித்து மேலும் அவரே உங்களிடம் தெரிவிப்பார்” என்று பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு அரபு நாடுகள் காசு கட்டப் போகின்றனவா?

அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! - ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது ஏன்?

மூன்று முறை மு.க.ஸ்டாலின் நின்று வென்ற தொகுதி என்பதால், சென்னை ஆயிரம் விளக்கு ஒரு நேரத்தில் விஐபி தொகுதியாகாப் பார்க்கப்பட்டது.என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பிறகு ஸ்டாலின் கொளத்தூருக்கு மாறி விட்டார்... மேலும் பார்க்க

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 : வேட்புமனு முதல் வேட்பாளர்கள் வரை.! key Details | Full schedule

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி, ஒரே கட்டமா... மேலும் பார்க்க

கட்சித் தாவும் தலைவர்கள்... அதிருப்தி அலையால் அல்லாடும் காங்., பாஜக - `அதகள' அஸ்ஸாம் தேர்தல் களம் !

காங்கிரஸ் டு பாஜகஇந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம், அஸ்ஸாம். இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளவிருக்கும் ஐந்து மாநிலங்களில் அ... மேலும் பார்க்க

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! - நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணிஅதே நேரம், ட... மேலும் பார்க்க

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண... மேலும் பார்க்க

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் - மே.வங்க தேர்தலில் போட்டியா?!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இ... மேலும் பார்க்க