செய்திகள் :

'ஈரான் போரை உடனே நிறுத்துங்கள்' காங்கிரஸில் நிறைவேறிய சிறப்பு தீர்மானம்! ட்ரம்ப்-க்கு பின்னடைவு?

post image

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அப்படியான ஒன்று தான் ஈரான் மீதான போர்.

ட்ரம்பின் இந்த நகர்வு அமெரிக்காவில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஆக, ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் கீழவையில், 'ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்ப பெறுவதற்கான' சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்திற்கு ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியில் இருந்தும் வாக்குகள் கிடைத்துள்ளன. அதனால், 215 - 208 என்று இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்
அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்க மேல்சபையில் ஒப்புதல் இல்லை. அதனால், இது சட்டமாகாது என்றாலும், அதிபருக்கு எதிராக இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்த ஆண்டிலேயே இதுவரை நான்கு முறை கீழவையில் ட்ரம்பின் ஈரான் போருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், போதிய வாக்குகள் இல்லாததால், அவை நிறைவேறவில்லை.

ஆனால், நேற்று போதிய வாக்குகள் கிடைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படி அதிபருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிச்சயம் ட்ரம்பிற்கு பின்னடைவு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க