செய்திகள் :

Rajinikanth: உழைப்பாளி டு ஜெயிலர் 2; 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டிக்கு என்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்!

post image

நடிகர் ரஜினிகாந்த் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென வருகை தந்திருக்கிறார். மைசூரில் இருந்து முதுமலை வழியாக வாடகை கார் மூலம் தனியாக ஊட்டிக்கு வருகை தந்த ரஜினிகாந்த், பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்குச் சொந்தமாக ஊட்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கிறார்.

ரஜினிகாந்த்தின் இந்தத் திடீர் வருகை குறித்து நீலகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலருக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் இவரைச் சந்தித்துள்ளனர். தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் ரஜினிகாந்த்தைச்‌ சந்தித்து புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

பல ஆண்டுகள் கழித்து ஊட்டிக்கு வருகைத் தந்திருக்கும் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள், " 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தலைவர் பட ஷூட்டிங் என்னாலே ஊட்டியில்தான் இருக்கும். அதனால் சென்னைக்கு அடுத்தபடியாக தலைவரை ஊட்டியில்தான் எப்போதும் பார்க்க முடியும்.

உழைப்பாளி படம் ஷூட்டிங் முடிந்து சென்றவர், அதற்கு பிறகு ஊட்டிக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டிக்கு வராமல் இருந்தவர் திடீரென நேற்று முன்தினம் வந்தார். இரவு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் நேற்று காலை மைசூர் திரும்பி விட்டார். ஜெயிலர் -2 ஷூட்டிங் நடப்பதாகத் தெரிகிறது" என்றனர்.

`அந்தக் குழந்தை நட்சத்திரமா இவர்?' - ஆச்சர்யப்பட்ட ஜெயராம் - நினைவுகளை பகிர்ந்து கொண்ட பரத்!

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து நடித்திருக்கும் 'பரிமளா & கோ' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் 'லப்பர் பந்து' சஞ்சன... மேலும் பார்க்க

Sigma: "ஜேசன் சஞ்சயிடமிருந்து பொறுமை குறித்து நிறைய கற்றுக்கொள்ளலாம்!" - சந்தீப் கிஷன்

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க ராஜூ சுந்தரம், சம்பத், அன்புதாசன் ஆகியோர் முக்கியக் க... மேலும் பார்க்க

ஹைக்கூ கவிதை விழா: "3350 கவிதைகளிலிருந்து 53 கவிதைகள்" - சுவாரஸ்யம் பகிரும் லிங்குசாமி

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 2ம் ஹைக்கூ கவிதைப் போட்டியினை நடத்தி வருகிறார் இயக்குநர் லிங்குசாமி. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நேற்று அதன் ஐந்தாம் ஆண்டுக்கான விழா தேவநேயப்பாவ... மேலும் பார்க்க

"மரணத்தின் விளிம்பு வரை சென்ற இயக்குநரை லிங்குசாமிதான் போராடி மீட்டார்" - பகிரும் ஏ.ஆர். முருகதாஸ்

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிர... மேலும் பார்க்க

"அவர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பிறகு மக்களும் அரசியலுக்குள் வந்துட்டாங்க!" - லிங்குசாமி

வருடந்தோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைகூ கவிதைப் போட்டியை இயக்குநர் லிங்குசாமி நடத்தி வருகிறார். தொடர்ந்து 5-ஆம் ஆண்டாக இந்தாண்டும் அப்போட்டிக்கான அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டிருந... மேலும் பார்க்க

அந்தரன்: "பிரஜின் உடைஞ்சு அழுவதைப் பார்த்திருக்கேன்; ரொம்ப வருஷ கனவு இது" - சாண்ட்ரா எமோஷனல்

பிரஜின், இவானா வருண், அதிரன், பத்மன், அனுபமா குமார் உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அந்தரன்’. சந்தோஷ் இராவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 2) நடைபெற்ற... மேலும் பார்க்க