செய்திகள் :

`‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவுதான் ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன்!' - சூர்யகுமார் யாதவ்

post image

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஜேக்கப் பெத்தேலின் அதிரடியை கடந்து இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

Suryakumar
Suryakumar

போட்டிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் பேசியவை, 'இது ஒரு நம்ப முடியாத உணர்வு. இந்தியாவில் விளையாடி, இப்படிப் பெரிய அணியை வழிநடத்துவது, அதுவும் உலகக் கோப்பை இங்கே நடக்கும்போது அஹமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு செல்வது, இவை அனைத்தும் எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.

‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’

சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்ய வந்தவுடன் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருந்தது. ஒரு விக்கெட் விழுந்தபோதும் கூட இந்த பிட்ச் நல்லதாக இருப்பதை அவர் புரிந்திருந்தார். அவர் பேட்டிங் செய்த விதம் அணிக்கு தேவையானதுதான்.

ஹாரி புருக்கிடம் நான் நகைச்சுவையாக, ‘உங்களுக்கெதிராக இன்னும் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?’ என்று கேட்டேன். ஆனால் உண்மையாகச் சொன்னால் அது நல்ல பிட்ச். அவர்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதற்கான கிரெடிட்டை அவர்களிடம் இருந்து எடுக்க விரும்பவில்லை. அவர்கள் முழுப் போட்டியிலும் ஆட்டத்தில் இருந்தார்கள், இலக்கை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருந்தார்கள்.

Suryakumar
Suryakumar

ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் மற்ற பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை மீண்டும் எங்களிடம் கொண்டு வந்த விதம் அசாதாரணமானது. பும்ரா என்ன செய்யக்கூடியவர் என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக அவர் செய்த பங்களிப்பும் நமக்குத் தெரியும். இன்று மீண்டும் அதையே செய்து தனது பொறுப்புணர்வை காட்டி ஆட்டத்தை எங்களுக்குச் சாதகமாக மாற்றினார்' என்றார்.

ஈரான் - இஸ்ரேல் போர்: 'நான் வீட்டுக்கு போகணும்'- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் டேரன் சமி

'நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்' என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமியின் பதிவு, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக... மேலும் பார்க்க

Finn Allen: `இது சிறிய வெற்றி தான்; ஞாயிற்றுக்கிழமை தான் டார்கெட்' - அதிவேக சதம் அடித்த ஃபின் அலன்

ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய ந... மேலும் பார்க்க

NZ vs SA: `ஆரம்பத்திலேயே பறித்துவிட்டார்கள்; இது மோசமான இரவுதான், ஆனால்.!" - மார்க்ரம்

நேற்று ஈடன் கார்டன்-ல் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,நியூசிலாந்து அணி 170 என்ற ஸ்கோரை 13 வது ஓவரிலேயே அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?

உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன?தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில்... மேலும் பார்க்க

"ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்"- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க

மகத்தான சாதனைகள்; ஸ்டார்க் கண்ணீர் - கிரிக்கெட் என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும் அலிஷா ஹீலி!

“இன்று நம்முடன் ஒரு அறிமுக வீராங்கனை உள்ளார். இன்றைய நாளை அவருக்கே உரியதாக்குவோம். அது நாளைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பேசியிருந்த... மேலும் பார்க்க