செய்திகள் :

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" - மம்தா பானர்ஜி தாக்கு

post image

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள்.

ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையும் இழந்து வருகிறார் மம்தா பானர்ஜி.

தற்போது திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி அணி, ரிதப்ரதா பானர்ஜி அணி என இரு அணிகள் உருவாகியுள்ளன. 58 எம்.எல்.ஏக்கள், 20 மக்களவை உறுப்பினர்கள் மம்தாவை விட்டு பிரிந்துவிட்டனர்.

இதனால், மம்தாவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி நேற்று பேஸ்புக் லைவ்வில் அரசியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளவை...

"என் சொந்த அலுவலகத்தில் இருந்துதான் நான் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கினேன். 1984-இல் நான் எம்.பி. ஆனதிலிருந்தும், அதற்கு முன்பே மாணவர் அரசியலில் இருந்தபோதும் இந்த அலுவலகத்தை நான் நடத்தியிருக்கிறேன்.

அன்று என்னால் முடிந்ததென்றால், இன்றும் என்னால் முடியும். இன்று நாம் சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். ஒரு நாள், எல்லாவற்றுக்கும் சான்றுகள் கிடைக்கும்.

துரோகிகளுக்காக நான் மக்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் சின்னத்தில் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

நான் 1997-ல் கட்சியைத் தொடங்கியபோது, என்னுடன் ஒரே ஒரு எம்.பி மட்டுமே இருந்தார். ஜனவரி 1, 1998 - எங்களுக்கு சின்னம் கிடைத்தது. வெறும் ஒரு மாதமும் 22 நாள்களுமே இருந்த நிலையில் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம்.

அப்போது என்னால் சின்னத்தைக்கூட மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. சமூக வலைத்தளங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், நினைவிருக்கட்டும்... நாங்கள் மக்களின் இதயங்களை வென்றோம்.

1998-ல் எங்களுக்கு 7 எம்.பி-க்கள் கிடைத்தார்கள், பின்னர் 8 ஆனார்கள். 1999-இல் மற்றொரு மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போதும் எங்களுக்கு 9 எம்.பி-க்கள் கிடைத்தார்கள்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பின்னர் 2004-இல் நான் முற்றிலும் தனித்து விடப்பட்டேன். 2006-ல் சட்டமன்றத்தில் எங்களுக்கு 30 இடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் 2004-ல் நான் தனியாக இருந்தபோதும், நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை.

நாங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இன்று மாநிலங்களவையில் 10 எம்.பி-க்களும், மக்களவையில் 8 எம்.பி-க்களும் - மொத்தம் 18 எம்.பி-க்கள் எங்களிடம் உள்ளனர். பல எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். ஆம், சிலர் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு வருகிறார்கள்.

2004-ல் நான் தனியாக இருந்தபோது என்னால் புதிதாகத் தொடங்க முடிந்ததென்றால், 1997-இல் என்னால் புதிதாகத் தொடங்க முடிந்ததென்றால், 2026-லும் புதிதாகத் தொடங்கும் பலம் எனக்கு இருக்கிறது. எனக்கு அவ்வளவு பலம் இருக்கிறது.

அரசியலில் இருப்பார்கள். என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், என் வயதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒரு மனிதனின் வயது அவனது மனம், உடல் மற்றும் மன வலிமையால் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா? வயதைப் பற்றி யாரும் கேட்பதில்லை" என்று பேசியுள்ளார்.

பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "இன்று நடைபெற்றது பட்ஜெட்... மேலும் பார்க்க

விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.... மேலும் பார்க்க

"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத... மேலும் பார்க்க

`தவெக புதிய தொழிற்சங்கம்; நீண்ட கால ரசிகரை தலைவராக்கும் முதல்வர் விஜய்?' - திட்டத்தின் பின்னணி!

திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகளை போல தவெகவுக்கும் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர் விஜய். இந்த தொழிற்சங்கத்தின் தலைவராக தனது நீண்ட நாள் ரசிகர் ஒருவரின் பெயரையும் விஜய் டிக் அடித்... மேலும் பார்க்க