செய்திகள் :

உங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் கல்யாணம் கைகூட; ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

post image

திருமண வயதை அடைந்த பிறகும் சரியான வரன் கிடைக்காமல் தள்ளிப்போனாலும், திருமணத் தடை நீங்கவும், எந்த விதச் சிரமமும் இல்லாமல் நல்லபடியாக தகுதியான துணை கிடைக்கவும், சரியான வயதில் - பொருத்தமான முறையில் திருமணம் நடக்கவும் சுயம்வர பார்வதி ஹோமம் செய்வது உகந்தது.

பொதுவாக ஜோதிடப்படி செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப் படும் ஜாதகர்களுக்குக் கல்யாணம் தாமதப்படுகிறது. மட்டுமன்றி வேறுபல கிரகநிலைகளும் கல்யாணத் தடைக்குக் காரணமாகின்றன.

சூரியன், தேய்பிறைச் சந்திரன் மற்றும் சந்திரனுடன்கூடிய பாப கிரகங்கள், செவ்வாய், பாபிகளுடன் சேர்ந்த புதன், சனி, ராகு, கேது ஆகிய பாப கிரகங்கள்... இவை, களத்திரகாரகனான சுக்கிரனுடனோ, 7-ம் வீட்டிலோ, 7-ம் வீட்டுக்கு அதிபதியுடனோ சேர்ந்திருப்பதும், பார்ப்பதுமான நிலை, திருமண தோஷத்தை விளைவிக்கும்.

பெண்களுக்குக் குரு, பர்த்துரு (கணவன்) காரகன் ஆவார். எனவே, பெண்களின் ஜாதகத்தில் குரு பலம் குறைந்திருக்கக் கூடாது. சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு இருக்கும் இடத்திலிருந்து பிற கிரகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். சுக்கிரன் நிலையைக் கவனிப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஜன்ம லக்னமே எல்லாவற்றிலும் முக்கியமாகும். அதற்கடுத்ததாக ராசி முக்கியத்துவம் பெறும்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

திருமணத் தடைகளை ஏற்படுத்தும் கிரக நிலைகள்!

சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் பகையாகி, களத்திர ஸ்தானமான 7-ல் இருப்பது, லக்னத்துக்கு இருபுறமும் பாப கிரகங் கள் இருப்பது. `பாப கர்த்தரி யோகம்’ ஆகும்.

லக்னத்துக்கு 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பது, லக்னத்துக்கு 12-ல் சனி இருப்பது, சூரியனும் களத்திரகாரகன் சுக்கிரனும் ஒன்று சேர்ந்து, சுக்கிரன் அஸ்தமனம் அடைந்திருப்பது... இப்படியான நிலைகளும் தோஷத்தை அளிக்கும்.

சுக்கிரன் ஆண் ஜாதகத்தில் 6, 8, 12-ல் மறைவது, களத்திர ஸ்தானாதிபதி அதாவது லக்னத்துக்கு 7-ம் வீட்டோன் 6, 8, 12-ல் மறைவது ஆகிய நிலைகளும் தோஷமாகும்.

இப்படியான சகலவிதமான தோஷங்களையும் பாதிப்புகளையும் களைந்து, விரைவில் கல்யாணப் பாக்கியம் தரும் அற்புதமான வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம்.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

ஹோமம்

ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோம மந்திரங்களின் மகத்துவம்

தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. நாரதர், எப்படியாவது பார்வதியின் தவத்தை முடக்க முயன்றார். கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார். பார்வதிதேவிக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம்.

இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகத் தெரிகிறது. அந்த மந்திரங்கள் ‘உலகத்தில் உள்ள சகல விதமான அசையும்- அசையாப் பொருட்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே வேண்டுகின்றன.

மட்டுமன்றி கல்யாண வரம் குறித்த பிரார்த்தனைகளும் இதில் உண்டு. யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ, அவரை முன்னிட்டுச் செய்யப்படும் இந்த சங்கல்ப மந்திரங்களின் அர்த்தம், ‘கெட்ட பலன்களைத் தரும் கிரக அமைப்பினாலோ, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ காரியங்களாலோ, முன்னோர்கள் எப்போதோ செய்த தவறுகளாலோ, இவருக்குத் திருமணம் தடை படுகிறது. இந்த நட்சத்திரத்தில், இன்ன ராசியில் பிறந்த இவருக்கு திருமணத் தடை நீங்கி, சுயம்வர பார்வதி- பரமேஸ்வரரின் அருள் பெற்று விரைவாகவும் உசிதமான காலத்திலும் திருமணம் நடைபெற இந்த ஹோமம் செய்கிறேன்’ என்பதே ஆகும்.

இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்வதால் மங்கல வரங்கள் கைகூடும் என்கின்றன ஞானநூல்கள். இந்த ஹோம வழிபாட்டால் தோஷங்கள் நீங்கும். மனதுக்கு சந்தோஷத்தைத் தரக் கூடியவரும், தான் மனதில் நினைக்கும் காரியத்தைக் குறிப்பால் அறிந்து நிறைவேற்றக் கூடியவரும், இந்த சம்சார சாகரத்தை சந்தோஷமாகத் தாண்டுவதற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவருமான வாழ்க்கைத்துணை அமையும் என்கின்றன சாஸ்திரங்கள்.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

வேலூர் ஹோமம்

ஶ்ரீபார்வதியை வேண்டும் பிரார்த்தனை

இந்த ஹோமத்தின் தியான மந்திரங்களின் கருத்து என்ன தெரியுமா? ‘பார்வதிதேவி உதய கால சூரியனைப் போல் பிரகாச மாக இருக்கிறாள். அவள் கழுத்தில் இருக்கும் மாலையில் வாசமுள்ள மலர்கள் இருப்பதால், வண்டுகள் வட்டமிடுகின்றன. எல்லோரும் பிரமிக்கிற அளவுக்கு அவளது தோற்றம் அழகாக இருக்கிறது. பரமேஸ்வரனை மெதுவாக நெருங்கி அவள் மாலை யிடுகிறாள். அந்த பார்வதிதேவி எந்த விதமான வேண்டுதலையும் சாதித்துக் கொடுக்கக் கூடியவள். எனது ஆசைகளை நிறைவேற்றித் தருமாறு கேட்டு அவளை நமஸ்கரிக்கிறேன்’ என்று வணங்குவதாக உள்ளன.

இவ்வளவு மகத்துவமான ஹோம வழிபாட்டில் சங்கல்பம் செய்து கலந்துகொண்டு வழிபடுவதுடன், மேற்காணும் தியான வேண்டுதலைச் சொல்லி அனுதினமும் அம்பிகையை வழிபட்டு வந்தால், தடைகளும் தோஷங்களும் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும்.

அற்புதமான இந்த ஹோமம் மிகவும் புண்ணியம் வாய்ந்த க்ஷேத்திரத்தில் நிகழும்போது, அதற்கான மகத்துவம் பன்மடங்காகப் பெருகும். அவ்வகையில், வேலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயிலில் ஶ்ரீசுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெறவுள்ளது. சக்திவிகடனும் லலிதா ஜுவல்லரியும் இணைந்து வழங்கும் இந்த ஹோமத்தில் நீங்களும் நேரில்கலந்துகொண்டு சங்கல்பித்து வழிபடலாம்.

அம்பிகை அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் அருளால் கல்யாண வரம் விரைவில் கைகூடும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிவரும்; சகலவிதமான மங்கலங்களும் பொங்கிப் பெருகும்.

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்

வாசகர்கள் கவனத்துக்கு

நாள்: 1.11.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10 மணி முதல்

இடம்: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, வேலூர்.


திருமணப் பிரார்த்தனை யாருக்காகச் செய்யப்படுகிறதோ, அவர்கள் நேரில் கலந்துகொள்வது மிகவும் விசேஷமாகும்.

முன்பதிவு செய்தவர்கள் ஹோமம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, கோயிலுக்கு வருகை தர வேண்டும்.

ஹோமத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்பவர்களுக்கு, ஜலகண்டேஸ்வரர் தர்மஸ்தாபனம் சார்பில் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சுயம்வரகலா பார்வதி யந்திரப் படம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: 044-6680 2980 / 044-6680 2907 / 96770 69112

ஐப்பசி அன்னாபிஷேகம் அக் - 25... வீட்டில் உணவுப்பஞ்சம் வாராதிருக்க இதைக் கட்டாயம் செய்யுங்கள்!

ஐப்பசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு ஐப்பசி பௌர்ணமி, அன்னாபிஷேகம்தான். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் இது. இந்த மாதம்... மேலும் பார்க்க

Mahalaya Amavasai | தோஷம் தீர தர்ப்பணம் செய்யும் முறை... எளிய சங்கல்பம் | மகாளய அமாவாசை

மகாலய பக்ஷ அமாவாசையின் சிறப்பு என்ன? 2026-ல் மகாலய அமாவாசை எந்த நாளில் வருகிறது? முன்னோர்களுக்குத் தர்ப்பணம், ஸ்ராத்தம் மற்றும் தானங்கள் செய்வதன் முக்கியத்துவம் என்ன? தர்ப்பணம் செய்யும் முறை, செய்ய வே... மேலும் பார்க்க

தீராத கஷ்டங்களுக்குத் தீர்வாகும் யதிதுவாதசி, கஜச்சாயை.! மகாளயபட்சத்தில் இந்த நாள்களைத் தவறவிடாதீங்க!

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பு வரும் 15 நாள்கள். இந்த நாள்கள் மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக முன்னோர்களை வழிபட மிகவும் உகந்தவை. இந்தக்காலகட்டத்தில் நம் முன்னோ... மேலும் பார்க்க

'எடுக்க எடுக்கக் குறையாத அன்னம்... எல்லா உயிர்க்கும் அன்பு' - வள்ளலார் அவதார தின சிறப்புப் பதிவு!

வடலூர் ராமலிங்க அடிகள் தமிழகத்தில் அவதரித்த மகான். வாழும்போதே ஜோதிவடிவமாக இறைவனை தரிசித்து அந்த வழியை மற்றவரும் அடைய வழிகாட்டியவர். அதேவேளையில் உயிர்களுக்குச் செய்யும் தொண்டே அந்த ஈசனுக்குச் செய்யும் ... மேலும் பார்க்க

Anbe Sivam | காந்தியடிகள் வியந்துபோற்றிய தமிழ்ப்பெண் | Inspirational Speech | பொன்னம்பல அடிகளார்

மகாத்மா காந்தியடிகள், தில்லையாடி வள்ளியம்மை, சுவாமி விவேகானந்தர், பேரறிஞர் அண்ணா மற்றும் பகத் சிங் போன்ற மாபெரும் தலைவர்களின் வாழ்க்கையில் வாசிப்புக்கும் தியாகத்திற்கும் இருந்த முக்கியத்துவத்தை விளக்க... மேலும் பார்க்க