செய்திகள் :

உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

post image

திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடக்கு, தெற்கு, டெல்டா பகுதிகளில் இளைஞரணி கூட்டங்களை முடித்துவிட்டு இறுதியாக நேற்று தான் திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம்

கருமத்தம்பட்டி பகுதி அருகே கூட்டம் நடைபெற்றது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களின் 39 தொகுதிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்காக போடப்பட்டிருந்த மேடை, நுழைவு பந்தல் உள்ளிட்டவற்றில் கருணாநிதியின் படத்தை பூதக்கண்ணாடி மூலம் தேடி வேண்டியதாக இருந்தது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படத்தையும் ஏதோ நினைவு சின்னம் போல மிகவும் சிறிதாக வைத்திருந்தனர்.

திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம்

பெயர் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும், நிர்வாகிகள் என்னவோ குறைந்தளவுக்குத்தான் இருந்தார்கள். கோவை, கரூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை வைட்டமின்களுடன் `சிறப்பாக' கவனித்து அழைத்து வரப்பட்டனர்.

இதிலும் வட இந்திய தொழிலாளர்களை அதிகம் காண முடிந்தது. எல்லோருக்குமே உதயநிதி புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் கொடுக்கப்பட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் செந்தில் பாலாஜி  சிக்கன் பிரியாணி + முட்டை இரவு உணவு ஏற்பாடு செய்தார். அரசுப் பேருந்துகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகளில் தான் அழைத்து வந்தனர். அதில் பெரும்பாலனோர் மது அருந்தியிருந்தனர்.

திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம்
திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம்

சிலர் ஸ்பீக்கருக்காக போடப்பட்டிருந்த கம்பியின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர். உதயநிதி மாலை 5 மணியளவில் தான் மேடையேறினார். மதியம் 2 மணியளவில் இருந்தே அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் அமர வைக்கப்பட்டனர். வெயில் வாட்டி வதைத்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.

கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வரவில்லை என்றும், வருகிற 27-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

எல்இடி திரை பழுது
மோப்ப நாயுடன் சோதனை

மேடையில் இருந்த எல்இடி திரை அவ்வபோது பழுதானது. உதயநிதி ஸ்டாலின் நுழைவு வாயிலில் இருந்தே, ரேம்ப் மூலம் மேடை வர திட்டமிட்டனர். ரேம்பின் 2 பக்கமும் காவல்துறையினரை நிறுத்தி, மோப்ப நாய் மூலம் சோதனை செய்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

ஆனால் உதயநிதி வந்த பிறகு காவல்துறை மற்றும் நிர்வாகிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் ரேம்பில் ஏறி அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். சிலர் உதயநிதி கையைப்பிடித்து இழுத்து காயப்படுத்தினர். இதில் உதயநிதி ஒரு நொடி அதிர்ச்சியாகி தன் கையை பார்த்தபடி சென்றார்.

உதயநிதி
உதயநிதி

காவல்துறையினர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேடை ஏறியதும் உதயநிதி தன் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவினார். உதயநிதி பேசி முடித்த பிறகும் நிர்வாகிகள் மொத்தமாக ரேம்பில் ஏறி முண்டியத்தனர்.

காவல்துறையினர் அவர்களை அதிரடியாக விரட்டி உதயநிதியை அனுப்பி வைத்தனர். உதயநிதிக்கு ஒரு பக்கம் பில்டப் என்றால், ஈரோடு எம்பியும் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருமான பிரகாசும் பயங்கர பில்டப்புடன் வலம் வந்தார். உதயநிதி வருவதற்கு முன்பு ரேம்பில் அங்கேயும், இங்கேயும் சுற்றினார்.

முண்டியத்த கூட்டம்
உதயநிதி

உதயநிதி புறப்பட்டுவிடுவார் என்பதற்காக அவர் பேசுவதற்கு முன்பாகவே பிரகாஷ் நன்றியுரை வாசித்தார். ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எண்டு கார்டா என்பது போலத்தான் மொத்த கூட்டமும் இருந்தது.!

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு ... மேலும் பார்க்க

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்!விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்ம... மேலும் பார்க்க

TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! - வேலூரில் விஜய் பேசியது என்ன?

வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், " எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யா... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்... மேலும் பார்க்க