செய்திகள் :

உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?

post image

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'இப்போ வரி வசூலிப்பதை நிறுத்துவது எல்லாம் சரி தான்... இதுவரை வாங்கிய வரிகள் என்ன ஆகும்?' என்கிற கேள்வி எழுவது நியாயம் தான்.

IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. 'ரீஃபண்ட் செய்ய தயார்' என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது.

ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்... அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை.

அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

யாருக்கு கிடைக்கும்?

ரீஃபண்ட் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பதாவது...

"ரீஃபண்ட் தொகை கட்டாயம் செல்லும். அவை நிறுவனங்களுக்கு செல்லுமே தவிர, அமெரிக்க மக்களுக்கு செல்லாது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

பிற நாட்டு பொருள்களின் வரி ஏறும்போது, அமெரிக்க கடைகளில் அந்தப் பொருள்களுக்கான விலையும் ஏறியது. அதனால், அதிக தொகை கொடுத்து தான், அமெரிக்க மக்கள் பொருள்களை வாங்கி வந்தனர்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்

ஸ்காட் பெசென்ட் பேச்சை வைத்து பார்க்கும்போது, அதிக தொகை செலுத்தி பொருள்களை வாங்கிய அமெரிக்க மக்களுக்கு எந்த ரீஃபண்டும் கிடைக்காது என்று தெரிய வருகிறது.

இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.

ரீஃபண்ட் என்றால் அது எளிதாக கிடைத்துவிடாது. அதில் ஏகப்பட்ட வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கும். இவை அனைத்தையும் ஃபாலோ செய்து ரீஃபண்ட் பெறுவது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கும்.

ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அது மிகக் கடினம். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவது அவர்களுக்கு சிரமத்தில் சென்று முடியும்.

எப்போது கிடைக்கும்?

அடுத்ததாக, இந்த ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை.

அதனால், இந்த நடைமுறை முடிய மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ ஆகும் என்று ட்ரம்ப் முதல் ஸ்காட் பெசென்ட் வரை தெரிவித்திருக்கிறார்கள்.

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு ... மேலும் பார்க்க

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்!விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்ம... மேலும் பார்க்க

TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! - வேலூரில் விஜய் பேசியது என்ன?

வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தவெக தலைவர் விஜய், " எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்... மேலும் பார்க்க

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க

CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம்திமுக - ... மேலும் பார்க்க