செய்திகள் :

Vote Vibes : ரஜினி `கொடுத்தும்' எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?

post image

தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. அதை மனதில் வைத்துதான் 1996 இல் நான் நினைத்திருந்தால் முதலமைச்சரே ஆகியிருப்பேன் என ரஜினியே பேசியிருந்தார். ஆனால், தமிழக அரசியலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடாத சம்பவங்களும் இருக்கவே செய்கிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

1991-96 ஜெயலலிதா ஆட்சி நிறைய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட ஆட்சி. அந்த சமயத்தில் ரஜினிக்கும் ஜெ-க்குமே முட்டல் மோதலாகவே இருந்தது. நிறைய மேடைகளில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் ரஜினி பேசினார். போயஸ்கார்டனுக்குள் ரஜினியின் காரை நுழையவிடாமல் ஜெவின் பாதுகாவலர்கள் தடுக்க ரஜினி காரிலிருந்து இறங்கி தெருவில் நடந்து பரபரப்பை கிளப்பியதாகவும் கதைகள் உண்டு. பாட்ஷா பட மேடையில் 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது' எனப் பேசி அதிமுக ஆட்சியை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தார்.

இதைத் தொடர்ந்துதான் 1996 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் தமாகாவும் அமைத்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது' என்றார். தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தது. கருணாநிதி முதல்வரானார். மூப்பனாரின் தமாகாவுக்கு பெரு வெற்றி.

அதிமுக வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதிலிருந்துதான் ரஜினி வாய்ஸூக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கம் இருக்கும் என்கிற பேச்சு எழுந்தது.

Rajinikanth
Actor Rajinikanth

ஆனால், 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக - தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக தமாகா கூட்டணி 9 இடங்களிலும் மட்டுமே வென்றது. ரஜினி வாய்ஸ் இங்கே எடுபடவில்லை.

அதேமாதிரி, பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பாமகவுக்கும் முட்டிக் கொண்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருந்தது.

ஆக, ரஜினி வாய்ஸ் எடுபடாமல் போன சம்பவங்களும் இங்கே இருக்கிறது. மேடையில் சிலர் அந்த சம்பவங்களை வசதியாக மறந்துவிடுவர்.

(தொடரும்)

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்... மேலும் பார்க்க

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு ... மேலும் பார்க்க

CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம்திமுக - ... மேலும் பார்க்க

உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடக்கு, தெற்கு, டெல்டா பகுதிகளில் இளைஞரணி கூட்டங்களை முடித்துவிட்... மேலும் பார்க்க

பக்தவத்சலம்: முதல் தேர்தல் வெற்றியிலேயே ஒரு தலைமுறையின் வரலாற்றைத் தீர்மானித்தவர்! | முதல் களம் 07

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின்... மேலும் பார்க்க

`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?' கவுன்சிலர் தேர்வில் மோதல்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை ... மேலும் பார்க்க