பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி
உடன் பிறப்புகளைப் பற்றி அஷ்ட வர்க்கம் மூலம் அறிய முடியுமா?
பொதுவாகவே ஜோதிடம் பார்க்கும்போது தந்தையின் உடன் பிறப்புகள் எத்தனை பேர், தாயின் உடன் பிறப்புகள் எத்தனை பேர் எனச் சொல்லும் ஜோதிடரைக் கண்டு வியப்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும், இவரை இப்போதுதான் பார்க்கிறோம், இவரால் எப்படி இதனைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறது எனச் சிலர் வியப்பதும் உண்டு. ஜோதிடர்கள் முதலில் இதனை ஏன் கூறுகிறார்கள் என்றால், ஜாதகம் பார்க்க வந்தவரின் ஜாதகம் சரிதானா என அறிவதற்கே..
ஒரு சிலர் ஜாதகரின் குண நலன்களை, அவர் பெறும் நல்லது கெட்டவற்றை முதலில் கூறி அந்த ஜாதகரின் ஜாதகம் சரியானது தானா என உறுதிப்படுத்தி மேற்கொண்டு பலன் கூற விழைவார்கள். ஜாதகர் அளித்த ஜாதக குறிப்புகள் கேட்க வந்தவரின் நிலையை உறுதிப்படுத்தவே இவ்வாறு கேட்கப்படுகிறது. ஒரு சில ஜோதிடர்கள், பெறப்பட்ட ஜாதகம் ஆணினுடையதா, பெண்ணினுடையதா அவர் அளித்த பிறப்பு குறிப்புப்படி குழந்தை சுக பிரவத்தில் பிறந்ததா அல்லது அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிறந்ததா எனவும் கேட்பதுண்டு. ஆக பிறப்பு குறிப்பு சரியாக இருந்தால் அனைத்தையும் திறமைமிக்க ஒரு ஜோதிடரால் கூறிவிட முடியும் என்பதுதான் உண்மை.
அதோடு, தந்தையுடன், தாயுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் அதில் ஆண், பெண் எத்தனை என்பதனையும் அறியமுடியுமா என்றால் நிச்சயம் 85 சதவீதம் வரை பொருந்துவதைக் காணமுடியும். எளிய முறையில் உடன் பிறப்புகளைக் காணுதல் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம். இதனை "அஷ்ட வர்க்க" மூலம் காணலாம்.
தந்தையின் உடன் பிறப்பு பற்றி அறிதல்
ஒரு ஜாதகத்தில், சூரியனின் அஷ்டவர்க்கத்தில், சூரியன் நின்ற ராசிக்கு 9ஆம் இடத்தில் சூரியன் பெற்ற பரல்கள் தான் விடை. இருப்பினும், இதில் வரும் எண்ணிக்கையில் நீச்சம் பெற்ற கிரகம் இருப்பின் நீக்கவும், ஆண் கிரகம் ஆண் உடன் பிறப்பையும், பெண் கிரகம் அளித்த பரல்களை பெண் உடன் பிறப்புமாகக் கருத வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று பிள்ளைகளின் ஜாதகத்தினை கொண்டு இதனை இங்கே விளக்கமாகக் காணலாம். இதில் முக்கியமாக தமது தந்தையை, யார் உண்மையாக மதிக்கிறாரோ அவரின் ஜாதகத்தைக் கொண்டுதான் அவர்களின் தந்தையின் உடன் பிறப்பினை காணமுடியும்.

ஜாதகம் (1)ல் சூரியன் விரைய ஸ்தானத்தில் உள்ளதால், இதனைத் தந்தையின் உடன் பிறப்பைப் பற்றி அறிந்துக்கொள்ள முடியாது.
ஜாதகம் (2)ல் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இடம் பெற்றுள்ளதால், இதனையும் தந்தையின் உடன் பிறப்பைப் பற்றி அறிந்துக் கொள்ள முடியாது.
ஜாதகம் (3)ல் சூரியன் 10ல் திக் பலம் பெற்றுள்ளதால், இதில் சூரியனுக்கு 9ஆம் இடம் அளித்துள்ள பரல் எண்ணிக்கையையே சரியானதாகக் கொள்ள வேண்டும். அதுவே சரியாகும்.
தாயின் உடன் பிறப்பு பற்றி அறிதல்
ஒரு ஜாதகத்தில், சந்திரனின் அஷ்டவர்க்கத்தில், சந்திரன் நின்ற ராசிக்கு 4ஆம் இடத்தில் சந்திரன் பெற்ற பரல்கள் தான் விடை. இருப்பினும், இதில் வரும் எண்ணிக்கையில் நீச்சம், அஷ்டமாதிபதி பெற்ற கிரகம் இருப்பின் நீக்கவும், ஆண் கிரகம் ஆண் உடன் பிறப்பையும், பெண் கிரகம் அளித்த பரல்களைப் பெண் உடன் பிறப்புமாகக் கருத வேண்டும்.
இளைய சகோதரம் பற்றி அறிய
ஒரு ஜாதகத்தில், செவ்வாயின் அஷ்டவர்க்கத்தில், செவ்வாய் நின்ற ராசிக்கு 3ஆம் இடத்தில் செவ்வாய் பெற்ற பரல்கள் தான் விடை. இருப்பினும், இதில் வரும் எண்ணிக்கையில் நீச்சம், அஷ்டமாதிபதி பெற்ற கிரகம் இருப்பின் நீக்கவும், ஆண் கிரகம் ஆண் உடன் பிறப்பையும், பெண் கிரகம் அளித்த பரல்களைப் பெண் உடன் பிறப்புமாகக் கருத வேண்டும்.
மனைவி உடன் பிறப்பு பற்றி அறிய
ஒரு ஆண் ஜாதகத்தில், சுக்கிரனின் அஷ்டவர்க்கத்தில், சுக்கிரன் நின்ற ராசிக்கு 7 ஆம் இடத்தில் சுக்கிரன் பெற்ற பரல்கள் தான் விடை. இருப்பினும், இதில் வரும் எண்ணிக்கையில் நீச்சம், அஷ்டமாதிபதி பெற்ற கிரகம் இருப்பின் நீக்கவும், ஆண் கிரகம் ஆண் உடன் பிறப்பையும், பெண் கிரகம் அளித்த பரல்களைப் பெண் உடன் பிறப்புமாகக் கருத வேண்டும்.
கணவரின் உடன் பிறப்பு பற்றி அறிய
ஒரு பெண் ஜாதகத்தில், செவ்வாயின் அஷ்டவர்க்கத்தில், செவ்வாய் நின்ற ராசிக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் பெற்ற பரல்கள் தான் விடை. இருப்பினும், இதில் வரும் எண்ணிக்கையில் நீச்சம், அஷ்டமாதிபதி பெற்ற கிரகம் இருப்பின் நீக்கவும், ஆண் கிரகம் ஆண் உடன் பிறப்பையும், பெண் கிரகம் அளித்த பரல்களைப் பெண் உடன் பிறப்புமாகக் கருத வேண்டும்.
இவ்வளவு பலன்கள் அஷ்டவர்க்கம் மூலம் அறிய முடிந்தாலும், இதிலும் சில சிரமங்கள், இயலாமை உள்ளது. அதில் ஒன்று 2 1/2 மணி நேரத்திற்குள் பிறக்கும் அனைவருக்கும் ஒரே பரல்கள் தான். இருப்பினும் பலன்கள் ஒவ்வொரு ஜாதகத்தை வைத்து பலன் காணும் திறமை, சிறந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தான் புலப்படும். இரண்டாவதாக இரட்டை குழந்தைப் பிறப்பில் இது பலன் அறிய முடியாத தாய் இருப்பதும் குறையே.
தொடர்புக்கு: 98407 17857, 91502 75369