செய்திகள் :

உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார்.

ஆனால் பப்லு அங்கிருந்து செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் பப்லுவிற்கும் சங்கர் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பப்லுவை கத்தியால் தாக்கி அவரது கழுத்தை சங்கர் அறுத்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தில் பப்லுவின் கழுத்தை அறுத்து எடுத்ததோடு அந்தக் கழுத்தைத் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார். அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பயத்தில் இச்சண்டையில் தலையிடாமல் ஒதுங்கி நின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அக்கிராமத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கொலை
கொலை

பப்லுவின் வீட்டிற்கு போலீஸார் சென்றபோது அங்கு பப்லு எந்தக் கவலையும் இல்லாமல் சமையல் செய்து கொண்டிருந்தார். அவரது அருகில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருந்தது.

அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து பப்லுவைக் கைது செய்தனர். பப்லுவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பப்லுவிற்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கணவன் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அவரது மனைவி கதறி அழுதார்.

Vinay Kulkarni: பாஜக பிரமுகர் கொலை வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு... மேலும் பார்க்க

180 மைனர் பெண்கள் பாலியல் வன்கொடுமை; டெலிகிராமில் பரவிய வீடியோ; குற்றவாளியின் வீடு இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்கள் 180 பேரை காதலிப்பதாகப் பேசி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அயன் அகமத் (18) என்ற வாலிபர் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரிடமிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: 180 மைனர் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து ஆன்லைன் வெளியிட்ட நபர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் மைனர் பெண்களைக் குறிவைத்து மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. அமராவதி அருகில் உள்ள பரத்வாடா என்ற இடத்தில் வசிக்கும் தன்வீர் என்பவர் மைனர் பெண்களைக் காதலி... மேலும் பார்க்க

பெண் காணாமல்போன வழக்கு; அலட்சியம் காட்டிய 28 போலீஸார் சஸ்பெண்ட்; கோர்ட் தலையிட்டு அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிண்டஜோரா இடத்தை சேர்ந்த புஷ்பா (18) என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரின் தாயார் ரேகா தேவி போலீஸில் புகார் செய்திருந்தார... மேலும் பார்க்க

கும்பமேளா வைரல் பெண்ணைத் திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்கு; கேரள சிபிஎம் நிர்வாகிகளிடம் விசாரணை?

பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடந்த மகா கும்பமேளாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்றுக்கொண்டிருந்த மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து அவர் பிரபலமானார். கும்... மேலும் பார்க்க

சேலம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை; நடந்தது என்ன?

சேலம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீவித்யா என்பவர் ஆசிரிய... மேலும் பார்க்க