செய்திகள் :

உருளைகிழங்கு மூடைகளுடன் கடத்தி வரப்பட்ட கஞ்சா பார்சல்கள் - 3 பேரை கைது செய்த க்யூ பிரிவு போலீஸ்!

post image

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து கஞ்சா, வலி மாத்திரைகள் மற்றும் மெத்தமைன், ஐஸ் போன்ற போதை மருந்துகள் இலங்கைக்கு கடத்தி செல்லப்படுவது அதிகரித்து வருகிறது. கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் கடற்படை என பல பிரிவுகள் இருந்தாலும், அவர்களது கண்காணிப்புகளையும் மீறி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது.

கஞ்சா மூடைகள்

இந்நிலையில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்கக காய்கறி வேனில் கஞ்சா கொண்டுவரப்படுவதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் பேருந்து நிறுத்தத்தில் க்யூ பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காய்கறி ஏற்றி வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு கைதானவர்கள்

இந்த சோதனையின் போது உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறி மூடைகளுக்கு இடையே சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் இருந்துள்ளது. அவற்றை க்யூ பிரிவு போலீஸார் பிரித்த போது அதில் தலா 2 கிலோ எடையில் 146 பார்சல்களில் கஞ்சா இருந்துள்ளது. புதுமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இவை கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட  192 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்த க்யூ பிரிவு போலீஸார், வேனை ஓட்டி வந்த விளாத்திகுளத்தை சேர்ந்த தங்கராஜ், சேகர் மற்றும் பெருங்குளத்தை சேர்ந்த செந்தில்வேலன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க