செய்திகள் :

`உறுதியாகாத கூட்டணி' - காங்கிரஸ் வென்ற தொகுதிகளை குறிவைத்து காய் நகர்த்தும் தி.மு.கவினர்!

post image

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது வரை எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

த.வெ.கவுடன் காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தநிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற சில தொகுதிகளை கேட்டு தி.மு.க-வினர் காயை நகர்த்தி வருகின்றனர். அதில் சென்னை வேளச்சேரி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தி.மு.க-வினர் பலர் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்.

வேளச்சேரி, ஸ்ரீவைகுண்டம்..

சென்னை வேளச்சேரி தொகுதி, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதைப் போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றார். இந்த இரண்டு தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இதுதவிர காங்கிரஸ் வெற்றி பெற்ற மற்ற தொகுதிகளையும் தி.மு.க-வினர் கேட்டிருக்கிறார்கள்.

அசன் மவுலானா எம்.எல..ஏ

வேளச்சேரி

சென்னை வேளச்சேரி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானாவும் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தத் தொகுதி குறித்து உளவுத்துறையும் தி.மு.கவும் நடத்திய சர்வேயில் சில முக்கிய தகவல் வந்திருக்கிறது. அதில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், தற்போதைய வெற்றி வாய்ப்பு குறித்தும் கிடைத்த தகவல் அடிப்படையில் இந்தத் தடவை கூட்டணி அமைந்தாலும் வேளச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டாம் என் மனநிலையில் தி.மு.க தலைமை இருப்பதாக தகவல் உள்ளது.

அதனால் தி.மு.க இளைஞரணி, வேளச்சேரி தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் காயை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் துணை முதல்வர் உதயநிதியின் ஆசியோடு இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயலுக்கு சீட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

தவெக தலைவர் விஜய், இந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினரும் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க-வை பொறுத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ-வும் மாவட்டச் செயலாளருமான அசோக் இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியையும் தி.மு.கவினர் கேட்டு கட்சித் தலைமையில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், 7 தடவை காங்கிரஸும் 5 தடவை அ.தி.மு.கவும் மூன்று தடவை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது.

அதனால் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் கோட்டையாகவே இந்தத் தொகுதி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது. அதிக தடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 2021-ல் நடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார். இவர் சென்னையில் வசிப்பதால் தொகுதி பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதோடு தொகுதி மக்களின் குறைகளையும் அவர் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி முழுவதும் பரவலாக கேட்க முடிகிறது. இதை அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், தனக்கு சாதகமாக்கியதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால் தி.மு.க கூட்டணியில் இந்தத் தடவை எந்தக்கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தச் சூழலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் உள்ள தி.மு.க-வினரில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ

இந்தத் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க கூடாது என தி.மு.க-வினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல பொறுப்பாளரான எம்.பி கனிமொழியிடமும், மாவட்டச் செயலாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடமும் தி.மு.க-வினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தொகுதியில் தி.மு.க-வினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க-வினர், ``இந்தத் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதத்துக்கு மேல் நாடார்களின் ஓட்டுக்கள் உள்ளன. அதனால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே எல்லா கட்சியிலும் வேட்பாளர்களாக நிறுத்துவதுண்டு. அதற்கு அடுத்தப்படியாக பிள்ளைமார்கள், பட்டியல் சமூகத்தினர், தேவர் சமூகத்தினர் இருக்கிறார்கள். பிற சமூகத்தினர் பரவலாக தொகுதி முழுவதும் உள்ளனர்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் சண்முகநாதனுக்கு சரியான போட்டியாளரை இந்தத் தேர்தலில் களமிறக்க வேண்டும். அதனால்தான் இந்தத் தொகுதியை மன்னின் மைந்தனும் உள்ளூரிலேயே குடியிருக்கும் தி.மு.கவைச் சேர்ந்தவரை வேட்பாளராக கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்.

தூத்துக்குடி எம்.பியும் தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் தலைமை பொதுக் குழு உறுப்பினராக இருக்கும் சொர்ணகுமார் சீட் கேட்டு கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இவர், மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் குட் புக்கில் இருக்கிறார். இவரைத் தவிர சங்கர், பிரம்மசக்தி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை இந்தத் தடவையும் கேட்டுள்ளோம். நாங்கள் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெளியூர் எம்.எல்.ஏ என்ற பிம்பத்தை கூட்டணி கட்சியைச் சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஏற்படுத்தி அந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க காயை நகர்த்தி வருகின்றனர்.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

இந்தத் தொகுதி காங்கிரசின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் யார் என்பது பெரிய விஷயமல்ல. காங்கிரஸ் கட்சிக்கு என தனிப்பட்ட செல்வாக்கு இந்தத் தொகுதியில் இருப்பதால் நிச்சயம் கை சின்னம் வெற்றி பெறும். தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை நாங்கள் கேட்டால் அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதைப்போலதான் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க-வினர் கேட்பது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது" என்றனர்.

இதற்கிடையில் இந்தத் தொகுதியில் நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ டேவிட் செல்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொகுதியில் ஏற்கெனவே தனிப்பட்ட செல்வாக்கை வைத்திருக்கும் டேவிட் செல்வின், போட்டியிட்டால் விசில் சத்தம் அங்கு கேட்கவும் வாய்ப்பிருக்கிறது.

அடாவடி இலங்கை ராணுவம்; அச்சத்தில் தமிழ் மக்கள்.! - கச்சத்தீவில் இருந்து நேரடி ரிப்போர்ட்

தமிழ்நாடு அரசியல் களம் சட்டமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை கச்சத்தீவு அரசியலை பேசி வருகிறார்கள். இந்த பரபரப்புகளுக்கு மத்தி... மேலும் பார்க்க

`அதிமுக வலுவாகியிருக்கு, பாஜக வளர்ந்திருக்கு; இதுபோதும் அவங்க மாடலை உடைக்க.!' - சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா — அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி மேயர், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் என அரசியலில் ஒரு சுற்று வந்தவர். ஒரு கட்டத்தில் தலைமைக்கும் இவருக்கும் உரசல் வர, "ஜெயலலிதா என்னை அடித்தா... மேலும் பார்க்க

`உதயசூரியன் சின்னத்துக்கு ஓகே சொன்ன கமல்!' - மநீம, திமுக டீல் என்ன?

தி.மு.க கூட்டணிக்குள் நடக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. இதற்கிடையில் 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும்' என்ற தி.மு.க-வின் கண்டிஷனுக்கு ம.நீ.ம க்ரீன்... மேலும் பார்க்க

Iran: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று,... மேலும் பார்க்க

Modi: "திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!" - மதுரையில் மோடி!

மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம... மேலும் பார்க்க

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நி... மேலும் பார்க்க