செய்திகள் :

ஊட்டி கனமழை: 'போக்குவரத்து நிறுத்தம், 24*7 கட்டுப்பாட்டு மையம்' - மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்புகள்

post image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஊட்டி, குன்னூர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான சேதம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மண்சரிவு
மண்சரிவு

அதில், "இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (23.10.2026) இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும்வரை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பல்வேறு இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ​நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், அணைகள், ஏரிகள் மற்றும் பிற நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம்.

வெள்ளம் சூழ்ந்த சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருந்து விலகி இருங்கள். நிலச்சரிவுகள், மரங்கள் விழுதல், பாறைகள் சரிதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புடன் இருங்கள்.

மண்சரிவு
மண்சரிவு

மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளைப் பின்பற்றவும். மேலும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ​அத்தியாவசிய தேவையைத் தவிர பொதுமக்கள் பொதுஇடங்களுக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.‌

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் மழை குறித்த தகவல்களைத் தெரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.‌பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை மரத்தின் அடியில் நிறுத்தக்கூடாது.

நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் மழை பெய்யும்போது, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொட வேண்டாம். ​அடுத்த மூன்று நாட்களுக்கு அத்தியாவசிய மற்றும் அவசரகால வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, TNSTC சேவைகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035-க்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மண்சரிவு
மண்சரிவு

​இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது:

​உதகை கோட்டம்: 0423-2445577

​குன்னூர் கோட்டம்: 0423-2206002

​கூடலூர் கோட்டம்: 04262-261296

​உதகை வட்டம்: 0423-2442433

​குன்னூர் வட்டம்: 0423-2206102

​கோத்தகிரி வட்டம்: 04266-271718

​குந்தா வட்டம்: 0423-2508123

​கூடலூர் வட்டம்: 04262-261252

​பந்தலூர் வட்டம்: 04262-220734

​அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

​வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சம் அடைய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு லட்சுமி பவ்யா தன்னீரு மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி மாவட்டம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Extremely Heavy Rain: ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை - உருக்குலைந்த குன்னூர் மலைப்பாதை!

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பொழியத் தொடங்கியுள்ளது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிக... மேலும் பார்க்க

Rain Alert: 'குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது' தமிழ்நாட்டில் 27-ம் தேதி வரை கனமழை!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.தற்போது இந்திய வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு குறித்த வானிலை அப்டேட்...தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்த... மேலும் பார்க்க

அர்னாப் புயல் வருகிறது? `வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - மழை தீவிரமாகும் வாய்ப்பு! | Live

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிதமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் த... மேலும் பார்க்க

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு; தாய் காயம் - சாத்தூர் சோகம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பெய்த பலத்த மழையால் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் மாணவியின் தாயும் காயமடைந்துள்... மேலும் பார்க்க

Rain Alert: கொட்டித் தீர்த்த கனமழை; 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், கோவை, கரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் ... மேலும் பார்க்க

'வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி' - தமிழகத்தில் 26-ம் தேதி வரை மிகக் கனமழை!

2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதி வரை கொளுத்திய வெயில், இப்போதுதான் லீவு எடுத்திருக்கிறது.கடந்த வாரத்திலிருந்து தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.நேற்று (அக்டோபர் 21) இந்திய வானிலை மைய... மேலும் பார்க்க