செய்திகள் :

ஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; "புதிய மைல்கல்" - வனத்துறை நம்பிக்கை

post image

இந்திய அளவில் யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருப்பது வேதனையான உண்மை.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது பெரும்பாலான மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பணப்பயிர்களான தேயிலை, காபி தோட்டங்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில் தொடங்கி தற்போதைய வளர்ச்சிப் பணிகள் வரை யானைகளின் வாழிடங்களையும் வழித்தடங்களையும் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கி வருகின்றன.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

இதன் துயர்விளைவுகளை அப்பாவி யானைகளும் விளிம்பு நிலையில் இருக்கும் பழங்குடிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் போராடி வருகின்றன.

ஊருக்குள் நுழையும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுகிறோம் என வனத்துறை மேற்கொண்டு வரும் பழங்கால கும்கி யானைகள் யுக்தி முதல் நவீன நைட் விஷன் தெர்மல் டிரோன் கேமராக்கள் வரை எதுவுமே பெரிய அளவில் எடுபட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில்தான் யானை - மனித எதிர்கொள்ளல்களை மட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவை நாடியிருக்கிறது வனத்துறை.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

நீலகிரி எம்‌.பி ஆ. ராசா, வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் புதிய திட்டம் குறித்து வனத்துறையினர், "நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் நாடுகாணி வனச்சரகத்திற்குட்பட்ட ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Command-and-Control Centre) புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் 46 பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 34 செயற்கை நுண்ணறிவு மற்றும் 12 அதிநவீன செயற்கை நுண்ணறிவு என மொத்தம் 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வனவிலங்கு நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிப்பதால், அவற்றின் நடமாட்டம் மற்றும் மனித- எதிர்கொள்ளல்களுக்கான அபாயம் குறித்து உடனடியாக எச்சரிக்கைகள் உருவாக்கப்படும்.

இந்த எச்சரிக்கைகள் மற்றும் கட்டளைகள் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வனப்பணியாளர்களுக்கும், வனப்பகுதியினை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 எச்சரிக்கை ஒலிபெருக்கிகள், குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்படும்.

ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு
ஏ.ஐ மூலம் யானைகள் கண்காணிப்பு

தடையில்லா தகவல் தொடர்பிற்காக கூடலூர் வனக்கோட்டத்தில் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு வலையமைப்பும் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

யானை- மனித எதிர்கொள்ளல் மேலாண்மையில் இந்த செயற்கை நுண்ணறிவு மையம் புதிய மைல்கல்லாக அமையும் " என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!

பாலைவனம் என்றாலே சுட்டெரிக்கும் சூரியன், திசையெங்கும் மணல், தகிக்கும் தாகம், அவ்வப்போது வந்து செல்லும் மணற்புயல், பயணிக்க ஒட்டகம் இப்படித்தான் நம் கண்களில் காட்சி விரியும். ஆனால், கொஞ்சம் கற்பனை செய்த... மேலும் பார்க்க

ஊட்டி: உறைபனியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள் | Photo Album

போக்குவரத்து நெரிசல்உறை பனி உறை பனிஉறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உ... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றத்தின் வரையறையால் ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா? மத்திய அரசு என்ன சொல்கிறது?

இந்தியாவின் 'பச்சைக் கவசம்' என்று அழைக்கப்படுகிற ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்து என்று சூழலியல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். என்ன பிரச்னை? 'குறிப்பிட்ட பகுதியில் 100 மீட்டர் மற்றும் அதற்குள் மே... மேலும் பார்க்க

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற... மேலும் பார்க்க

ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!

ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் 'வானவில் தீவு' என்று அழைக்க... மேலும் பார்க்க