`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதா...
``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்
மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோதுதான் அச்சலுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். இந்தக் காதல் அச்சல் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அச்சலும், அவரது காதலனும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு அச்சல் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அச்சல் தனது காதலனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இந்நிலையில், சக்ஷாம் தனது காதலி வீட்டிற்கு அருகில் நடமாடுவதாக அச்சலின் தந்தைக்கு தகவல் கிடைத்தது.
உடனே அச்சலின் தந்தை கஜானன் தனது மகன்கள் சாஹில் மற்றும் ஹிமேஷ் ஆகியோருடன், சில உறவினர்களையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அவர்கள் சக்ஷாமை பார்த்தவுடன் அடித்தும் உதைத்தும் தாக்கினர். பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதற்குப் பிறகு பெரிய கல்லை எடுத்து சக்ஷாம் தலையில் போட்டுக் கொலை செய்தனர்.
சக்ஷாமின் உடலை அவரது வீட்டில் பெற்றோர் இறுதிச்சடங்கிற்காகத் தயார் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அச்சல் திடீரென அங்கு வந்தார். அவர் தனது காதலன் உடல் முன்பு மஞ்சளை எடுத்து பூசிக் கொண்டார். அதோடு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார்.

இறந்த காதலனைத் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார். “என் காதலன் இறந்துவிட்டாலும் எங்களது காதல் இன்னும் சாகவில்லை; எனவே நான் அவரைத் திருமணம் செய்கிறேன்” என்று கூறினார். இதை கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும், இறந்த காதலனை திருமணம் செய்து கொண்ட அச்சல், “இனி இதுதான் எனது வீடு. வாழ்நாள் முழுவதும் இங்குதான் இருப்பேன். என் பெற்றோர் வீட்டிற்கு செல்ல மாட்டேன். என் காதலன் இறந்த பிறகே எங்கள் காதல் வெற்றி பெற்றது; ஆனால் என் தந்தையும் சகோதரர்களும் தோற்றுவிட்டனர்” என்று கூறினார். அதோடு தனது காதலனை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
போலீஸார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து, 6 பேரை கைது செய்துள்ளனர்.




















