செய்திகள் :

எங்கள் மகளின் புகைப்படங்களை எடுக்காதீர்கள், மீறினால் சட்ட நடவடிக்கை: ரன்பீர் - ஆலியா பட்

post image

பாலிவுட் தம்பதிகளான ஆலியா பட், ரன்பீர் தங்களது மகள் ராஹாவின் புகைப்படங்களை எடுக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்கள்.

நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் இருவரும் பாலிவுட்டில் முன்னனி நடிகர், நடிகையாக இருக்கிறார்கள்.

இருவரும் கடந்த ஏப்.14, 2022இல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தை அதே ஆண்டு நவ.6ஆம் தேதி பிறந்தது.

ஏற்கனவே இந்தக் குழந்தையின் புகைப்படங்களை பபார்ஸி (தொழில்முறை புகைப்படக்காரர்கள்) எடுக்க வேண்டாமெனக் கூறியிருந்தனர்.

தற்போது, மீண்டும் இது குறித்து பேசியுள்ளார்கள். ரன்பீர், ஆலியா பேசியதாவது:

குழந்தையைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்

இது ஒரு தனிச்சலுகை பிரச்னையாகக் கூட தோன்றலாம். ஆனால், பெற்றோர்களாக நாங்கள் எங்களது குழந்தையைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்.

இன்று அனைவரும் செல்போன்களை வைத்துள்ளோம். எதை வேண்டுமானாலும் பதிவிடலாம். அது இணையத்தில் தீயாக பரவும். அதனால், அது எங்கள் கைகளில் கிடையாது.

பபார்ஸி (தொழில்முறை புகைப்படக்காரர்கள்) ஆகிய நீங்கள் எங்களது குடும்ப உறுப்பினர் மாதிரி. அதனால் உங்களிடம் மட்டும்தான் இதைக் கேட்க முடியும். இது வெற்றிபெற நீங்கள்தான் உதவ வேண்டும்.

மீறினால் சட்ட நடவடிக்கை

நான் மும்பையில் பிறந்தேன். நீங்கள் அனைவரும் எனது குடும்பம்தான். ஊடகங்களிடம் நாங்கள் கேட்கும்போது நீங்களும் அதை சரியாக செய்கிறீர்கள். நாம் இருவருமே சொன்னதைச் செய்கிறோம்.

ஆனால், மீண்டும் மீண்டும் இதை மீறுவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன். .

நடிகர் நடிகைகள் வாழ்க்கைக் குறித்து அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். ஆனால், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய அனுமதியில்லை என்றார்கள்.

பிரபலங்களின் குழந்தைகள் தனியுரிமை இந்த சமூக வலைதள காலகட்டத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது.

பிரம்மயுகம் கூட்டணியில் இணைந்த பிரணவ் மோகன்லால்!

நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.தொடர... மேலும் பார்க்க

பிரபாஸுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும்... மேலும் பார்க்க

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இளையராஜா வழிபாடு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச் 24) வழிபாடு மேற்கொண்டார்.கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக... மேலும் பார்க்க

ஜன நாயகன் அப்டேட்!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறி... மேலும் பார்க்க

விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி மனுத்தாக்கல்!

விவாகரத்து கோரி ஜி. வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து மனு அளித்துள்ளனர்.தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் ... மேலும் பார்க்க

சிக்கந்தர் டிரைலர்!

நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ள... மேலும் பார்க்க