செய்திகள் :

2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை

post image

2025-ம்‌ ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய‌‌ ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைக் கண்டது.

ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.91 வரை கூட சென்றது.

இது ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி தான். ஆனால், இது இறக்குமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது. விலைவாசி உயர்வு அச்சம் இந்தியாவின் பக்கம் எட்டிப்பார்த்தது.

ஆனால், சில நாள்களிலேயே, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவடைந்தது.

2026-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் படி, "2025-ம்‌ ஆண்டில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய‌ ரூபாய் 5 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. 2022-ம் ஆண்டில் இருந்து இந்திய‌ ரூபாய் கடும் வீழ்ச்சியைக் கண்டது கடந்த ஆண்டு தான்.

கடந்த ஆண்டு, ஆசியாவிலேயே மிக வீழ்ச்சியைக் கண்ட நாணயம் இந்திய ரூபாய்.

இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்

ஏன்‌ இந்த வீழ்ச்சி?

அமெரிக்கா இந்திய பொருள்களின் மீது 50 சதவிகித வரி விதித்தது இதற்கு முக்கிய‌ காரணம் ஆகும்.

அடுத்ததாக, வெளிநாட்டு‌ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பெருமளவு தங்களது முதலீடுகளை வெளியேற்றினர்.

இன்னொன்று, உலக அளவிலான நிலையற்ற தன்மை, நாணய சந்தையைப் பாதித்தது.

2026-ம்‌ ஆண்டு எப்படி இருக்கும்?

இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

அதனால், இந்திய‌ ரூபாயின்‌ மதிப்பு நிலையற்று இருக்கும்.

இப்போது சந்தையைக் கணிக்கும் போது, இந்திய‌‌ ரூபாயின் மதிப்பு கரடியின் பிடியில் இருக்கலாம்.

ஆனால்...

இந்த இறங்குமுகத்தைத் தாண்டி, இந்திய பொருளாதாரம் வலுவாக இருந்து வருகிறது.

உள்நாட்டு உற்பத்தி நன்கு இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? - 6 காரணங்கள் | Quick Points

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவிற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை: 1. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, பல ... மேலும் பார்க்க

`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்

இந்த ஆண்டில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட 90 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஏன் இந்த வீழ்ச்சி... இது... மேலும் பார்க்க

"நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன" - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொரு... மேலும் பார்க்க