2026: ட்ரம்ப் டு கிம் வரை; ரஷ்யா டு சுவிட்சர்லாந்து.. உலகம் முழுவதும் புத்தாண்டு...
நீலகிரி: குப்பையில் தவறிய தங்க மோதிரம்; தேடி உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணிப் பெண்கள்!
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது மைல் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா. வழக்கம்போல் வீட்டின் குப்பைகளை சேகரித்து நகராட்சி தூய்மை வாகனத்தில் நேற்று முன்தினம் காலை கொடுத்திருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது கையில் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் ஒன்றை தவறிவிட்டிருப்பதைக் கண்டு கவலையடைந்திருக்கிறார். வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் குப்பையில் தவறியிருக்கலாம் என சந்தேகித்த கதீஜா, இது குறித்து கூடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றிருக்கிறது நகராட்சி நிர்வாகம். அந்த பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட சுமதி, ஜோதி ஆகிய இரண்டு பெண்களும் உடனடியாக குப்பைக் கிடங்கிற்குச் சென்று, குப்பைகளை கொட்டிய இடத்தில் நீண்ட நேரம் தேடி ஒருவழியாக மோதிரத்தைக் கண்டறிந்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். கதீஜாவை வரவழைத்து மோதிரத்தை அவர் கையில் ஒப்படைத்திருக்கிறார்கள். குப்பையில் தவறவிட்ட அரை பவுன் மோதிரத்தை தேடி உரியவரிடம் ஒப்படைத்த பெண்களுக்கு பரிசாக புத்தாடைகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது நகராட்சி நிர்வாகம்.


















