செய்திகள் :

எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" - சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

post image

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடியானது. பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சை தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் விசில் சின்னம் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர் பிரேம்குமாரை மனதார ஆதரிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர். நம்முடைய சகோதரர். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமார் அவர்களை, மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12- ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

எடப்பாடி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு

நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜக பறக்கவிட துடித்த காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: மு.க. ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். அப்போது அவர் பேசியது.இந்தியாவில் அரசியல் திருப்பத்தை ஏ... மேலும் பார்க்க