செய்திகள் :

`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,

"ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார்.

ragupathi

எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது.

செவிலியர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட் -2 தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க-வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. பழுத்த மரம் தான் கல்லடிப்படும். அதனால்தான், அனைவரும் தி.மு.க-வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க-வை சொல்லித்தான் வர முடியும் பேச முடியும். தி.மு.க எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வை சொல்லி வருகின்றனர்.

ragupathi

இதிலிருந்தே தி.மு.க என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம். நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது, வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால், அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். தலைவர் பதவி கிடைத்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்தவர், தான் பார்த்த வள்ளி திருமண நாடகங்களையும் மற்ற நாடகங்களையும் நினைத்துக் கொண்டு விடிய விடிய நடக்கும் என்று நினைத்து சொல்லி வருகிறார். நிச்சயமாக இது நாடக கம்பெனி அல்ல. நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக் குழுதான், தி.மு.க தேர்தல் அறிக்கை குழு" என்றார்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க