செய்திகள் :

"எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா!" - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives

post image

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு.

அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.

இவர் முதல் முதலில் இசையமைப்பாளராக கமிட்டான திரைப்படம் பிரசாந்த் நடித்திருந்த 'மஜ்னு' படம்தான்.

'மின்னலே'
'மின்னலே'

ஆனால், 'மின்னலே' முதலாவதாக ரிலீஸாகிவிட்டது. எக்கசக்கமான ஹிட் பாடல்களை தந்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜிடம் ஏ.ஆர். ரஹ்மானின் டச் தெரிவதாக அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

25 ஆண்டுகளுக்கு முன்பு , 'மின்னலே' திரைப்படம் வெளியாவதற்கு முன்பு... அதாவது 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆனந்த விகடனுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில், விமர்சனங்கள் குறித்தும், அவருடைய வருங்கால திட்டங்கள் குறித்தும் அப்போது அவர் பகிர்ந்திருந்தார்.

அப்போது அவர், "ரஹ்மானின் உயரம் ரொம்ப ரொம்ப மேல இருக்கு சார். அவர் மியூஸிக் போல என்னுது இருக்குன்னு சொல்றீங்கன்னா டெக்னிக்கல் விஷயங்களில் நான் பொஃபெக்டா இருக்கறதுதான் காரணம்னு நினைக்கிறேன்.

மற்றபடி யாருடைய சாயலும் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். நான் ரஹ்மானிடம மட்டும் வேலைபார்க்கவில்லை. நான்கு மொழிகளில் நாற்பது மியூசிக் டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன்.

எல்லோரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன். எனது பன்னிரண்டு வருட உழைப்புக்குக் கிடைத்திருக்கும் உயர்வு இது. பன்னிரண்டு வயசிலேயே மியூஸிக் பக்கம் வந்துட்டேன். என் அப்பா ஒரு கிடாரிஸ்ட், அம்மா பாடகி சின்ன வயசிலேயே போர்டு வாசிக்க ஆரம்பித்துவிட்டதால், படிப்பில் கவனம் செல்லவில்லை.

பாடப் புத்தக நோட்ஸுகளைவிட மியூஸிக்கல் நோட்ஸ்தான் எனக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் படிப்பு முடிச்சேன். காலேஜ் போக ஆர்வமில்லை. படிப்பை மூட்டைகட்டி வெச்சிட்டு முழுநேரமும் மியூஸிக்ல இறங்கிட்டேன்.

Harris Jeyaraj - Ananda Vikatan Interview
Harris Jeyaraj - Ananda Vikatan Interview

''மின்னலே' பாடல் களைக் கேட்டபிறகு பத்துப் பன்னிரண்டு பேர் வந்தார்கள். நான் ரொம்ப யோசித்து நாலே நாலு படம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிடுகிடுவென்று படங்களை ஏற்றுக் கொள்வதைவிட தேர்ந்தெடுத்துச் செய்யலாம் என்பது என் திட்டம்." எனக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம், "கிராமிய இசைக்கு இளையராஜா, கானாவுக்கு தேவா, மாடர்ன் இசைக்கு ரஹ்மான் என்று ஆளுக்கு ஒரு ஏரியாவில் அசத்து றாங்க... நீங்க எப்படி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் தந்த ஹாரிஸ் ஜெயராஜ், ''இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ளே இப்படி ஒப்பீடு செய்யறது சரியா வராது. ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்... எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா. அதில் நிறைய அசத்த முடியும்." என்றிருக்கிறார்.

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்... மேலும் பார்க்க

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இ... மேலும் பார்க்க

நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

With Love: "உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க