செய்திகள் :

`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!

post image

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இருக்கிறது தேர்தல் களம். அதன் ஒரு பகுதியாக இன்று தவெக தலைவர் விஜய், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தினார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், ``தலைவர் விஜய் விருப்ப மனு கொடுத்த முக்கிய நிர்வாகிகள சந்தித்து முதற்கட்ட நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இணையப் போவதாக யூகங்கள் கிளம்புகிறது. யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

சிடிஆர் நிர்மல் குமார்
சிடிஆர் நிர்மல் குமார்

ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தால், அது கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படும். யூகங்களுக்குக் கருத்துச் சொல்லி நேரத்தை வீணடிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுவிட்டன. தற்போது தலைவருக்குப் பல பணிகள் இருப்பதால், விசாரணையைச் சென்னைக்கு மாற்றவோ அல்லது வேறு தேதி வழங்கவோ கோரியிருந்தோம்.

அதனடிப்படையில், வரும் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் கிடைத்துள்ளது. இது குறித்து ஆலோசித்துவிட்டு, முடிவெடுக்கப்படும். கரூர் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரமே இது தொடர்பான செய்திகள் வெளியாகின. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, பல்வேறு விவகாரங்களில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜிதான். சிபிஐ விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

vijay

தேர்தலுக்கான விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாகப் பல ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தனித்தனியாக அழைத்து தலைவர் நேர்காணல் நடத்தி வருகிறார். அனைத்துத் தொகுதிகளுக்கான நேர்காணல்களும் முடிந்த பிறகு, தகுதியான வேட்பாளர்கள் அடங்கிய முழுமையான பட்டியலைத் தலைமை முறைப்படி வெளியிடும்." என்றார்.

"போர் தொடர்ந்தால் உலகளாவிய எண்ணெய் சந்தைக்கு பேரழிவு ஏற்படும்" - எச்சரிக்கும் சவுதி அராம்கோ CEO

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மேற்காசியாவில் ... மேலும் பார்க்க

திமுக-வின் `தொகுதி குறைப்பு நடவடிக்கை' - அப்செட்டில் கூட்டணி கட்சிகள்; புதிய யுக்தியுடன் அறிவாலயம்!

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை... மேலும் பார்க்க

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது"- பிரதமர் மோடி

"தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரபலமாவதால் திமுக அதிர்ச்சி அடைந்து வருகிறது" என்று மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பிரதமர் மோடி 2026 தேர்தலை முன்னிட்டு மூன்றாவது முறையாக தமிழகம் வர இருக்... மேலும் பார்க்க

ஆளுநர் மாற்றம்... குடியரசுத் தலைவர் அதிருப்தி - மேற்கு வங்கத்தில் சுழன்றடிக்கும் `அரசியல் புயல்!'

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் மேற்குறிப்ப... மேலும் பார்க்க

'உங்க எல்லாரையும் எம்.எல்.ஏ-வா பார்க்கணும்!' - விஜய் `அறிவித்த' 60 வேட்பாளர்கள்?! - முழு விவரம்!

விஜய்யிடம் பாஜக கூட்டணிக்காக பேசிக்கொண்டிருக்கிறது என்கிற தகவல் அரசியல் புயலை கிளப்பியிருக்கும் சூழலில், தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை நேரில் அழைத்து, 'நீங்கள்தான் கேண்டிடேட். தொகுதியில் ... மேலும் பார்க்க

`தவெக-வுடன் கூட்டணியா? டீயும் காபியும் எப்போதும் ஒன்று சேராது..!' - அண்ணாமலை பதில்

அதிமுக- பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், இத... மேலும் பார்க்க