செய்திகள் :

`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! ' - CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்

post image

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவின் பெற்றோர் தெரிவித்தனர்.

அபிஜித்தின் தந்தை பகவான் திப்கே மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டுக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவர் சாம்பாஜி நகரில் உள்ள தனது இல்லத்தில் இது குறித்து அளித்த பேட்டியில், "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது உட்பட மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அபிஜித்

விரைவில் நடவடிக்கை இல்லை என்றால், நானும் எனது மனைவியும் மகாராஷ்டிராவில் போராட்டத்தை தொடங்குவோம். குறைபாடுள்ள தேர்வு முறையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு எனது குடும்பத்தினரோ அல்லது நெருங்கிய உறவினர்களோ நீட் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் அபிஜீத்துக்கு தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. எங்கள் மகன் தனக்காக போராடவில்லை. அரசு அமைப்பில் ஏற்பட்ட தோல்விகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்களுக்காக அவர் குரல் எழுப்புகிறார்''என்றார்.

இந்தப் போராட்ட இயக்கத்திற்கு "எதிரி நாடுகள்" நிதி அளிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பகவான்ராவ் நிராகரித்தார்; அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் கூறினார்.

"அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தங்கள் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்," என்றும் அவர் கூறினார். அபிஜீத்தின் தாயார் அனிதா டிப்கே இது குறித்து கூறுகையில், ``எனது மகன் போராட்டத்தைத் தொடங்கியபோது முதலில் கவலைப்பட்டோம். தற்போது நாடு முழுவதிலுமிருந்து கிடைத்து வரும் ஆதரவு எங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

என் மகனைப் பற்றிய செய்திகளைப் பார்ப்பதைத் தவிர்க்கிறேன். ஏனெனில் அது என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் போராட்டக் களத்தில் (ஜந்தர் மந்தரில்) என் மகனுக்குத் தாமாக முன்வந்து உதவுவதைக் காணும்போது தனது கவலைகள் குறைகிறது. அவன் தனியாக இல்லை என்பதையும், ஏராளமான மக்கள் அவனுடன் துணை நிற்கிறார்கள் என்பதையும் அறிந்து எனக்கு மன அமைதியை அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

அபிஜித் பெற்றோர் கடந்த 19ம் தேதி டெல்லிக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லி காவல்துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் அது போராட்டத்தின் கவனத்தைத் திசைதிருப்பக்கூடும் என்று அஞ்சிய அபிஜீத், அவர்களை அங்கு வராமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற... மேலும் பார்க்க

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க