செய்திகள் :

'என் மகன்/மகளுக்கு 18 வயசு; ஆனால்...' - கல்யாண செலவு நிதியைத் திட்டமிட வழிகாட்டி | பணம் வளர்ப்போம்

post image

குழந்தைகளின் திருமணம் என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. 'அப்படி செய்யணும்... இப்படி செய்யணும்' என்று ஏகப்பட்ட கனவுகள் வேறு இருக்கும்.

ஆனால், பெரும்பாலான திருமணங்கள் கடன் வாங்கித்தான் செய்யப்படுகின்றன.

இதைத் தடுக்க முன்னரே பிளான் செய்யுங்கள் என்று கூறுகிறார் நிதி ஆலோசகர் முனைவர் A.V செந்தில்.

"தனித்தனியாக முதலீடு செய்ய முடியாது என்று நினைப்பவர்கள், செல்வ மகள் அல்லது செல்வ மகன் திட்டத்திலேயே பணம் கொஞ்சம் கூட சேர்த்து முதலீடு செய்து வாருங்கள்.

படிப்பிற்காக பாதி பணத்தை எடுத்து, திருமணத்திற்காக பாதி பணத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

A.V செந்தில்
A.V செந்தில்

சிம்பிளாக திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு அவ்வளவு செலவு ஆகாது. இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆடம்பர திருமணத்தையே விரும்புகிறார்கள்.

ஆனால், அந்த ஆடம்பரம் பெரும் பணக்காரருடைய ஆடம்பரமாக இல்லாமல், நம்முடைய அளவிற்கு ஆடம்பரமாக இருந்தால் நல்லது.

இல்லை... ஆடம்பரமே வேண்டாம் என்று நினைத்தால், அது சூப்பரோ சூப்பர்.

என் மகள் அல்லது மகனுக்கு 18 வயதாகிவிட்டது. இப்போது எப்படி நிதி திட்டமிடலாம் என்று கேட்பவர்களுக்கான பதில்...

ரிஸ்க் எடுக்க முடியாதவர்கள்... ரிஸ்க் எடுக்க விருப்பமில்லாதவர்கள், 18 வயதில் இருந்து கல்யாணத்திற்கு ஆகக்கூடிய செலவு என்பதை தோராயமாகக் கணக்கிட்டு, அதற்கான சின்ன தொகையை மாதா மாதம் ஆர்.டியில் சேர்த்து வரலாம்.

இல்லையென்றால், மல்டி அசட் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம். இது மூலம் 8 - 10 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.

அதிக ரிஸ்க் எடுக்கலாம் என்பவர்கள் இக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்தால், ஒருவேளை, இரட்டிப்பு லாபம் கூட கிடைக்கலாம்.

முதலீடு
முதலீடு

அசாதாரண சூழல்களில் சந்தை இறங்கினால், வேல்யூயேஷன் குறைந்தால், அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, பல்க் தொகை இருந்தாலோ அல்லது கொஞ்ச தொகை இருந்தால் கூட அப்போது முதலீடு செய்யலாம்.

ஆனால், இக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்கள், கல்யாணம் ஆவதற்கு ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெப்ட் ஃபண்டிற்கு மாற்றி விடுவது நல்லது. இது ரிஸ்க்கைக் குறைக்கும்.

மேலே சொன்ன கணக்கெல்லாம் 18 வயது குழந்தைகளுக்கு, அவர்களுக்கு 5 - 7 ஆண்டுகள் கழித்து திருமணமானால் என்பதற்கான கணக்கு.

தங்க நகைகள் முன்னரே வாங்கி வைத்தால், கல்யாணத்தின் போது பழைய டிரெண்ட் ஆகிவிடும். அதனால், தங்க நகைகளில் முதலீடு செய்வதை விட, கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்துவரலாம்.

கோல்டு இ.டி.எஃப்பில் ரூ.100-க்கு கூட முதலீடு செய்யலாம் என்பது ப்ளஸ். அதனால், வாரத்திற்கு ஒரு ரூ.100-ஐ கோல்டு இ.டி.எஃப்பில் முதலீடு செய்து வந்தாலும், நல்ல லாபத்திற்கான வாய்ப்புகள் உண்டு.

செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்க வேண்டுமானால், கல்யாணத்திற்கு 2 - 3 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நம்பகமான நகைக்கடைகளில் நகை சீட்டுகள் கூட போடலாம் ".

உங்க குழந்தைகளோட School, College Fees சமாளிக்க இது ஒரு 'சூப்பர்' வழி! | பணம் வளர்ப்போம்

குழந்தை பிறந்தாச்சு... இதன் பிறகு, பெற்றோர்களுக்கு இருக்கும் அடுத்த மிகப்பெரிய செலவு, 'கல்விக் கட்டணம்'. எந்தத் திட்டமிடலில் கவனமாக இருக்கிறோமோ... இல்லையோ... கல்வி நிதி திட்டமிடல் மிகத் தெளிவாக இருக்க... மேலும் பார்க்க

'G.P.F. மற்றும் 'போஸ்ட் ஆஃபீஸ்' வேலைக்கு ஆவாதா? 'இரண்டாவது PF' பெற என்ன செய்யணும்?

காலை 9:45 மணிக்கு அவசரமாக வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பயோமெட்ரிக்கில் விரல் வைத்துவிட்டு, கொண்டுவந்த டிபன் கேரியரை டேபிளுக்குக் கீழே வைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தால்... அடுத்த விநாடி ஆரம்பமாகிறது உ... மேலும் பார்க்க

'பெற்றொர்' அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க 'பிளான்'! | பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பதுதான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இந... மேலும் பார்க்க

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க