செய்திகள் :

'என் மகன் மிதுன் அரசியலுக்கு வருகிறாரா?' - எடப்பாடி பழனிசாமியின் விளக்கம் என்ன?

post image

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்கள்.

தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்
தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்

இன்றைய அமர்வு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "என்னுடைய மகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும்தான் இருக்கிறார். அவர் அரசியலுக்குள் வரமாட்டார்" எனத் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அவருடைய மகன் மிதுன் குமார் அதிமுக-வில் முக்கியப் பொறுப்பிற்கு வருகிறார் எனத் தகவல்கள் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், இதற்கு அவர் விளக்கமளித்திருக்கிறார்.

அவர், "இன்று நேற்று மட்டுமில்லை, தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் சோதனையைப் பார்த்திருக்கிறோம். வெற்றி வாய்ப்பு, வெற்றி வாய்ப்பு இழப்பு மாறி மாறித்தான் இருக்கும்.

எங்களுடைய தலைவர்கள் இல்லாத சமயத்திலும் தேர்தலைச் சந்தித்து, 2021-ல் 66 இடங்களில் வெற்றி பெற்றோம். எனக்கு முன்பு பலரும் பழனிசாமி தொடர் தோல்வியைக் கண்டார் என்றார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் நான்தான் வென்றிருக்கிறேன். அரசியல் சூழல் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்படுவது இயல்பு" என்றவர், "என்னுடைய மகன் மிதன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்லிக்கொள்கிறேன். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கிறார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' - சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் ... மேலும் பார்க்க

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க

`3 ஆண்டுகளுக்குப் பிறகு... சட்டமன்றத்தில் புதிய உதயம் தோன்றிய நாள்!' - ஆளுநர் ஆரலேகர் பெருமிதம்

முந்தைய ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக- அரசுக்கும் இடையே இருந்த அதிருப்தி சூழல்களால், 'ஆளுநர் உரை' என்றாலே தமிழ்நாடு அரசியல் களம் உன்னிப்பாக கவனிக்கும். இந்த சூழலில் இன்று மாநிலப் பொறுப்பு ஆ... மேலும் பார்க்க

ஆளுநர் உரை: ``எல்லாம் ரீல்ஸ்க்கான கண்டென்ட்; வாயைத் திறங்க CM சார்..!" - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர், மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் உரையுடன் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன், 2-வது தேசிய கீதம் பா... மேலும் பார்க்க