செய்திகள் :

``என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும்" - அதிமுகலிருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன்

post image

அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க-வின் மாணவரணிச் செயலரும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தலைவருமாகச் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். சிங்கை கோவிந்தராசின் மகனான சிங்கை ராமச்சந்திரன், கடந்த 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் ஆகியோரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் களமிறக்கப்பட்டார்.

கணபதி 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், 2,36,490 வாக்குகளைப் பெற்ற சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்தையே பிடித்திருந்தார். அதன்பின்னர், அவருக்குச் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் அ.தி.மு.க-விலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

சிங்கை ராமச்சந்திரன் அறிக்கை
சிங்கை ராமச்சந்திரன் அறிக்கை

''நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, நான் தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளேன் என்பதை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முடிவை நான் கோபத்திலோ, வருத்தத்திலோ, அல்லது எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாததாலோ எடுக்கவில்லை. என் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை, அஇஅதிமுக என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, என் குடும்பத்தின் ஒரு அங்கம். அதனால், இது எனக்கு ஒரு அரசியல் கடிதம் அல்ல. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து எழுதும் ஒரு மனப்பூர்வமான கடிதம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கை ராமச்சந்திரன் அறிக்கை
சிங்கை ராமச்சந்திரன் அறிக்கை

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க