செய்திகள் :

``எப்ஸ்டீன் அழைத்துச் சென்றார்; ட்ரம்ப் என்னை அடித்து.." - பகீர் பாலியல் குற்றச்சாட்டை வைக்கும் பெண்

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கூடுதல் கோப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு மைனர் பெண் கூறிய உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் இடம்பெற்று இருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்ணிடம் எஃப்.பி.ஐ நடத்திய விசாரணையின் மூன்று பகுதிகளைக் கொண்ட கோப்புகள் வெளியாகி இருக்கிறது. முந்தைய கோப்புகளை வெளியிடும்போது மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களின் சில பகுதிகளை "நகல்" என்று தவறாகக் குறிப்பிடப்பட்டதால், அவை அப்போது வெளியிடப்படவில்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நிர்வாகம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து ஜனநாயக கட்சியினர் விசாரணை வேண்டும் என்கிறார்கள். இக்கோப்பில் எஃப்.பி.ஐ டொனால்டு ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இடம்பெற்று இருக்கிறது.

அதில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், ''டொனால்டு ட்ரம்பிடம் என்னை எப்ஸ்டீன் தான் அறிமுகம் செய்தார். என்னை எப்ஸ்டீன் நியூயார்க் அல்லது நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்றார். அதிக அறைகள் உள்ள பெரிய கட்டடத்திற்கு என்னை அழைத்துச் சென்று, ட்ரம்பிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

உடனே ட்ரம்ப் அங்கிருந்த அனைவரையும் வெளியில் போகும்படி கேட்டுக்கொண்டார். என்னை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் வாய்வழியாக உறவை ஏற்படுத்திக்கொண்டபோது அவரது அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டேன். உடனே அவர் என்னை அடித்தார். இதனால் ஏற்பட்ட சத்தத்தில் மற்றவர்கள் மீண்டும் அறைக்குள் வந்தனர். ட்ரம்பும், எப்ஸ்டீனும் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். இதில் எப்ஸ்டீன் மற்றவர்களை மிரட்டுவது குறித்து பேசினார். ட்ரம்ப் பணத்தை சூதாட்டத்தில் செலவிடுவது குறித்து பேசினார்.

பாலியல் உறவின்போது எப்ஸ்டீன் என்னை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி எனது தாயாரை மிரட்டினார்.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டபோது அவர் அடிக்கடி மது, கஞ்சா மற்றும் கோகோயின் போன்ற போதைபொருளை எனக்கு கொடுத்தார். கடந்த பல ஆண்டுகளில் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று எனக்கும், என்னோடு தொடர்புடையவர்களுக்கும் பல முறை மிரட்டல் அழைப்புகள் வந்தது''என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இச்சம்பவம் நடக்கும்போது 13 முதல் 15 வயது இருக்கும். அப்பெண்ணின் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரிகள் சரிபார்க்கவில்லை என்று எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. அதிபர் டொனால்டு ட்ரம்ப் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில்,'' இந்தக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், நம்பகமான ஆதாரங்கள் இல்லாதவை. குற்ற பின்னணி கொண்ட பெண்ணிடமிருந்து இது போன்ற குற்றச்சாட்டு வந்திருக்கிறது''என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏராளமான மைனர் சிறுமிகளுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது மற்றும் அச்சிறுமிகளை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியதாக எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் தொடர்பான கோப்புகள் வெளியாகி அமெரிக்க பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

Christopher Tilak: "உழைக்கும் தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்" - கிறிஸ்டோபர் திலக்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இன்று திருச்சி ... மேலும் பார்க்க

`முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..!' - இடைத்தேர்தல் ஆடுபுலி ஆட்டங்கள்! | அரசியல் ஆடுபுலி 8

`எம்.எல்.ஏ. ஆகாமல் முதலமைச்சர்'அரசியல் ஆடுபுலி 8தமிழ்நாட்டு அரசியலில், எம்.எல்.ஏ. ஆகாதவர்கள், முதலமைச்சர் ஆன ஆடுபுலி ஆட்டங்கள் அவ்வப்போது நடந்துள்ளன. ராஜாஜி, காமராஜர், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்டோர் எம்.... மேலும் பார்க்க

Vijay: `வழக்கறிஞர்கள் மூலம் அனுமதி மறுப்பு?' - நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி கோரும் சங்கீதா

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்று... மேலும் பார்க்க

IRIS Lavan: மீண்டும் இந்தியப் பெருங்கடலில் ஈரானிய கப்பல்: அடைக்கலம் கொடுத்த இந்தியா!

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரான் போர் கப்பலை அமெரி... மேலும் பார்க்க

Iran - America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

டெல்லியில் நடைபெற்று வரும் 'ரைசினா டயலாக்' சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, ``அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்... மேலும் பார்க்க

நேபாளத் தேர்தல் 2026: ராப் பாடகர் டு பிரதமர்; 'ஜென் Z' ஆதரவுடன் முன்னிலையில் பலேன் ஷா!

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 'ஜென் ஸீ' (Gen Z) இளைஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில், ராப் கலைஞர... மேலும் பார்க்க