செய்திகள் :

`எல்லோரும் எம்.ஜி.ஆர், விஜய் ஆகிவிட முடியாது’ - தனுஷ், சிவகார்த்திகேயன் பற்றி துரைமுருகன் கருத்து!

post image

வேலூர் காட்பாடியில் உள்ள தனது வீட்டில் தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``இந்த ஆட்சியில் எல்லாமே மர்மமாக இருக்கிறது. வெளிப்படையாக எந்தச் செயல்களுமே நடைபெறுவதில்லை. மழைக்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த அரசு அதைச் செய்யவில்லை. எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும். மின்சாரம் வாங்குவதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. நம்மிடம் போதிய அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி இருந்தும்கூட `ஏன் வெளியில் இருந்து வாங்குகிறோம்?’ என்று இவர்கள் கூறுவதில்லை. இது ஒரு மர்மமான அரசாங்கம்.

நமக்கு கண்ணும், காதுமாக இருப்பது பத்திரிகைச் செய்திகள்தான். ஒருநாள் தவறாமல் 8 பக்க பத்திரிகைச் செய்திகளில் 80 கொலைச் செய்திகள் இருக்கின்றன. சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போயிருக்கிறது. காவல்துறையினரிடம் சரியான அணுகுமுறை இல்லையா? என்று தெரியவில்லை. அதேபோல, ஆளுங்கட்சியினர்தான் அதிகமாக போதைப்பொருள்கள் விற்பனைச் செய்வதாக செய்திகள் வருகிறது. இதற்கெல்லாம் விளக்கம் வேண்டும்.

துரைமுருகன்

காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது. அது பாவம், செத்துப்போன கட்சி. ஆரம்பத்திலிருந்து எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்த்தது நாங்கள்தான். அன்றைக்கு எல்லாம் இவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கவே இல்லை. வேண்டுமானால் பந்தயம் கட்டச் சொல்லுங்கள். காங்கிரஸ் எல்லாம் நமத்துபோன சமாச்சாரம். அந்தக் கட்சியைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. இந்த ஜென்மத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது’’ என்றவரிடம், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவது பற்றி நிருபர்கள் கேட்டபோது, ``ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அதேபோன்று மற்றவர்களும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது’’ என்றார் துரைமுருகன்.

அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி பெறப்பட்டு மோசடி நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்... மேலும் பார்க்க

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! - பின்னணி என்ன?

செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத... மேலும் பார்க்க

``இந்த ஆட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு 'திக் திக்' நிமிடங்களாக மாறிவிட்டது" - திமுக எம்.பி கனிமொழி

தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் குற்றங்களைத் தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்... மேலும் பார்க்க

அம்மா குடிநீர்: ``தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தவெக அரசு முடக்கி வைத்திருக்கிறது என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெள... மேலும் பார்க்க