செய்திகள் :

”எல்லோரும் விஜய் பின்னால் செல்கிறீர்களே.!” - சர்ச் திருப்பலியில் பாதிரியார் பேச்சால் சர்ச்சை

post image

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சில், நேற்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதில், நெல்லை செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியின் முதல்வரும், பாதிரியாருமான காட்வின் ரூபஸ் சிறப்பு பிரசங்கம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் பிள்ளைகள் அனைவரும் விஜய் ரசிகர்களாக உள்ளனர்.

பாதிரியார் காட்வின்

41 பேரை கொன்று குவித்தவனுக்கு, கையில் விலங்கிட்டவர் போல கை காட்டும் தலைவரான விஜய்யின் பின்னால் செல்லும் கூட்டம் அதிகமாகிறது. நான் விஜய்க்கு எதிரி அல்ல. ஆனால், நம் இளைஞர்கள், குழந்தைகள் எல்லாம் சினிமா நடிகர் பின்னால் ஏன் போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை கேட்க வேண்டும்.

பாரம்பரியம் என்பது இன்றோடு, நேற்றோடு முடிவது அல்ல. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார். பாதிரியார் காட்வினின் இந்த பேச்சுக்கு த.வெ.க தொண்டர்கள், சர்ச் பாதிரியார் அலாய்சியஸிடம் புகார் அளித்தனர். ‘சர்ச்சை அரசியல் மேடையாக்க வேண்டாம், பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட வேண்டும்’ என இளைஞர்கள் முறையிட்டனர்.

பாதிரியார் காட்வின்

மேலும், ஒரு வழக்கு சி.பி.ஐ விசாரணையில் இருக்கும் போது, மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவது உள்நோக்கத்துடன் செயல்படும் குற்றம் எனவும், பாதிரியார் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தி.மு.க ஏஜெண்டாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

`சிங்கத்தின் வாயில் மாட்டிய விஜய்; சிபிஐ மூலம் பாஜக ஸ்கெட்ச்' - செல்வப்பெருந்தகை விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ராகுல் காந்தி நாளை நீலகிரி மாவட்டம் கூடலூர் வருகிறார்.செல்வப்பெருந்தகை பள்ளி விழா ... மேலும் பார்க்க

கோவை டு டெல்லி; குடியரசு தலைவர் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்கீதா!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சாமுண்டேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருணமாகி 2 மகன்கள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் பாலாஜி கட்டுமான தொழிலாளி ஆவார்.இவர்கள் இருவரும் ... மேலும் பார்க்க

TVK Vijay: 7 மணி நேர விசாரணை: சிபிஐ-யிடம் விஜய் கொடுத்த வாக்குமூலம் என்ன?

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முன் ஆஜரானார். காலை 10.30 ... மேலும் பார்க்க

`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை "வெனிசுலாவின் தற்காலிக அதிபர்" எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில்... மேலும் பார்க்க

அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... மைனஸ்ஸா?!

தனக்கு முன்பாக மகன் அன்புமணியை அழைத்துக் கூட்டணியை இறுதி செய்ததில் என்.டி.ஏ-வின் மீதும் எடப்பாடியின் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.அதிருப்தியில் ராமதாஸ்பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க