செய்திகள் :

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

post image

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராணுவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய எம்.பி திருமாவளவன், " அ.தி.மு.க-வில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க- வில் இணைவது என்பது நாகரீகமான அரசியலாக இருக்க முடியாது. அது ஏற்புடையதும் அல்ல. இது போன்ற நடவடிக்கைகள் த.வெ.க- விற்கு நற்பெயரை ஈட்டி தராது.

அதற்கு மாறாக அவர்கள் மீதான நம்பகத்தன்மையை களங்கத்திற்கு உட்படுத்தும். அ.தி.மு.க - வில் உள்ள முன்னணி பொறுப்பாளர்கள் அந்தக் கட்சியில் நிலவுகிற குழப்பத்தின் காரணமாக இன்னொரு கட்சியில் சேர்வது என்பது வேறு.

குன்னூரில் திருமாவளவன்

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க - வில் இணைவது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையாக கருத முடியாது . பொதுமக்களும் இதை நம்ப மாட்டார்கள். இது போன்ற நடவடிக்கைகளை த.வெ.க ஊக்கப்படுத்துமானால் அது அக்கட்சியின் நற்பெயர் மீது களங்கத்தை உண்டாக்கும். நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் முதலமைச்சரின் டெல்லி பயணம் வழக்கமான ஒன்றுதான். யார் முதலமைச்சராக பொறுப்பேற்றாலும் பிரதமரை சந்திப்பது அவசியமானது. தவிர்க்க முடியாதது. அதனை வரவேற்கிறோம்" என்றார்.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க