செய்திகள் :

"எழுந்து செயல்பட வேண்டும் என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்"- போன்காலில் மோடியிடம் ஸ்மித் மிச்சார்

post image

ஃபிளைதுபாய் விமானச் சம்பவத்தில் கத்திக் குத்து காயம்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரை நேற்று இந்தியப் பிரதமர் மோடி...

“உண்மையான வீரர்... உங்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியிருந்தார்.

அபுதாபியில் மேல்சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரிடம் வீடியோ காலில் பேசினார் மோடி.

அப்போது மோடி, “முழுத் தேசத்தையும் நீங்கள் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.

மோடி
மோடி

காத்திருக்கிறது...

பாரதம் உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறது. நேற்றைய தினம் உங்கள் உடல்நலனுக்காக நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

உங்களுக்குச் சிறந்த முறையில் பராமரித்துச் சிகிச்சையளித்த சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், என்னைத் தொலைபேசியில் அழைக்கலாம்” என்று பேசினார்.

ஸ்மித் மிச்சார்‌ பேச்சு

மோடியிடம் ஸ்மித் மச்சார், “நீங்கள்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டி.

இன்று நீங்கள் என்னை ஊக்கப்படுத்திய விதம் எனக்கு மிகுந்த பெருமிதம் அளிக்கிறது.

எனக்குக் கடுமையான பல காயங்கள் இருந்தன.

ஆனால் ‘நான் எழுந்து செயல்பட்டே ஆக வேண்டும்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். அந்த இக்கட்டான சூழலில், என்னை நானே உந்தித் தள்ளி, காக்பிட் கதவைத் திறந்தேன்.

எனக்கு எப்போதெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் ஹனுமான் சாலிசாவைச் சொல்வேன்.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்

அந்த நேரத்திலும் கூட, நான் ஹனுமான் சாலிசாவை மட்டுமே தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்.

இன்று உங்களிடமிருந்து வந்த இந்த ஒரு அழைப்பு, எனக்கு உண்மையிலேயே மிகவும் பெருமை.

உங்களிடம் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை” என்று பேசினார்.

திம்மாவரம்: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்; வகுப்பறைக்குள் தேங்கும் மழைநீர்- குழந்தைகள் கல்வி பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பேசுகையில், “இந்த பள்ளிக் கட்டடம்... மேலும் பார்க்க

இந்தியில் வழிகாட்டிப் பலகை: எழுத்துக்கள் அழிப்பு; அலுவலர்கள் பணியிடை நீக்கம் - தமிழக அரசு

சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், சாத்தான்குளத்தில் புதிதாக வைக்கப்பட்ட வ... மேலும் பார்க்க

விலைவாசி உயர்வு: "ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?" - ஸ்டாலின் சாடல்

இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.அங்கு மக்களிடம் விலைவாசி குறித்து விசாரித்ததாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.அவரது பத... மேலும் பார்க்க

வெற்றிப் பயணத் திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்; எந்தெந்தப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளில் ஒன்றான ‘வெற்றிப் பயணத் திட்டத்தை’ இன்று சென்னையில் தொடங்கி வைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.இந்தத் திட்டத்தில் யார் பயன்பெறலாம்?இந்தத் திட்டத்தின் ... மேலும் பார்க்க

"கைது செய்தாலும் போராடுவோம்" - தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட இருந்த அபிஜித் திப்கே கைது

மத்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போராட்டத்திற்கு மும... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளி... மேலும் பார்க்க