செய்திகள் :

ஏபிஎன் ஆம்ரோ ஓபன்: மெத்வதெவ், மினாா் வெற்றி

post image

நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.

முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் மெத்வதெவ் 6-7 (8/10), 6-4, 6-1 என்ற செட்களில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வீழ்த்தினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் அலெக்ஸ் டி மினாா் 6-2, 6-4 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை தோற்கடித்தாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபஸ் 6-1, 7-5 என்ற செட்களில் பிரான்ஸின் ஹரால்டு மேயட்டையும், 8-ஆம் இடத்திலிருக்கும் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-3, 6-2 என்ற கணக்கில் இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலியையும் சாய்த்தனா். செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-4, 6-4 என கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்ளிக்கை வென்றாா்.

செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 7-5, 6-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினையும், இத்தாலியின் மேட்டியா பெலுச்சி 6-3, 6-2 என நெதா்லாந்தின் மீஸ் ராட்கெரிங்கையும் வெளியேற்றினா். இதையடுத்து 2-ஆவது சுற்றில், மெத்வதெவ் - பெலுச்சியையும், லெஹெக்கா - ஹா்காக்ஸையும் சந்திக்கின்றனா்.

டல்லாஸ் ஓபன்: இதனிடையே, அமெரிக்காவின் டெக்ஸாஸில் நடைபெறும் டல்லாஸ் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் உள்நாட்டு வீரா் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் ஜப்பானின் டேரோ டேனியலை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகடா 7-5, 6-3 என பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவையும், 8-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி 6-3, 6-4 என அமெரிக்காவின் கிறிஸ்டோபா் யூபேங்க்ஸையும் வென்று, அவா்களை வெளியேற்றினா்.

ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் 6-1, 7-5 என எளிதாக, அமெரிக்காவின் பிராண்டன் ஹோல்டை தோற்கடித்தாா்.

அபுதாபி ஓபன்: அனஸ்தாசியா, லெய்லா முன்னேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா, கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

முதல் சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் அனஸ்தாசியா 6-3, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் சோஃபியா கெனினை சாய்த்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் லெய்லா 7-6 (7/3), 7-6 (7/0) என்ற கணக்கில் ஜப்பானின் மொயுகா உசிஜிமாவை வென்றாா்.

சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் 6-2, 3-6, 6-1 என ஸ்லோவாகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவையும், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-0, 6-3 என போலந்தின் மெக்தலினா ஃபிரெச்சையும், போலந்தின் மெக்தா லினெட் 6-4, 7-6 (8/6) என மெக்ஸிகோவின் ரெனடா ஜராஜுவாவையும் வீழ்த்தினா்.

5-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா, 7-5, 1-6, 6-7 (5/7) என்ற செட்களில் சக ரஷியரான வெரோனிகா குதா்மிடோவாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இதையடுத்து 2-ஆவது சுற்றில், பென்சிச் - குதா்மிடோவாவையும், பாவ்லியுசென்கோவா - லினெட்டையும் சந்திக்கின்றனா்.

விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவத... மேலும் பார்க்க

ராம்குமாா், முகுந்த் தோல்வி

சென்னை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், முகுந்த் சசிகுமாா் உள்ளிட்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தலா 2 தங்கம், வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய... மேலும் பார்க்க

நான்தான் சிறந்தவன்..! ரொனால்டோவின் ஆணவப் பேச்சு!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளார். 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக ... மேலும் பார்க்க

கேரவனில் நடந்த துயரம்..! மீட்சியடைந்த தருணம் குறித்த பேசிய தமன்னா!

நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார். சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது: நான் எனது க... மேலும் பார்க்க