ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
"ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!"- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம்
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜன.8) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எந்தெந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
பாமக எங்களுடன் வந்து இணைந்திருக்கிறார்கள். அதுபோல இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வந்து இணையும்.

அதிமுகவில் ஓ. பன்னீர் செல்வம் சேருவதற்கு வாய்ப்பில்லை. சசிகலாவுக்கும் இடமில்லை.
அதிமுக வலிமையாகத் தான் இருக்கிறது. அமித் ஷாவும், நானும் சேர்ந்து எங்கள் கூட்டணியை அறிவித்தப்போதே அவர் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்துவிட்டார்.
அதிமுக-வில் டிடிவி, ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கனேவே சொல்லிவிட்டேன்.
திமுகவும் தான் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. நாங்கள் வைக்கும்போது மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.
கூட்டணி என்பது அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தான் மாறும். ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உறுதியளிக்கப்ட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருந்தார்.

அது அரசு ஊழியர்களை ஏமாற்றும் திட்டம். எங்கள் 5 ஆண்டு ஆட்சி சிறப்பாக நடைப்பெற்றது.
ஆனால் திமுக ஆட்சியில் அவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது. திமுக இந்தத் தேர்தலில் தோல்வி பெறுவது உறுதி" என்று பேசியிருக்கிறார்.















