அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 250 பேர் வெளியேற்றம்!
ஐ.நா. தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா
ஐ.நா. அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் ( யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீடித்த வளா்ச்சி இலக்குகளை கண்காணித்து தெரியப்படுத்தும் திறன் உள்பட பெரும் தரவுகளின் பலன்கள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதற்கு யுஎன்-சிஇபிடி உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
ஐ.நா. புள்ளியியல் கவுன்சிலில் அண்மையில் இந்தியா உறுப்பினரானது. இந்த நேரத்தில் யுஎன்-சிஇபிடி குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இது நாட்டின் புள்ளியியல் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.
யுஎன்-சிஇபிடி குழுவில் இணைந்ததன் மூலம், அதிகாரபூா்வ புள்ளியியல் தேவைகளுக்கு பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியலை பயன்படுத்துவதில், உலகளாவிய தரநிலைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைக்க இந்தியா பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.