செய்திகள் :

ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்

post image

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பினராயி விஜயன்

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்:

"நடிகர் ஸ்ரீநிவாசனின் மரணம் மலையாள சினிமாவால் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு சேர்த்ததிலும், சிரிப்பின் மூலமும், சிந்தனையின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுசேர்ப்பதில் இவரைப் போன்று நடிகர்கள் அதிகமாக இல்லை.

நடிகர் ஸ்ரீநிவாசன்

சினிமாவின் பல வழக்கங்களையும் தகர்த்துக்கொண்டு சினிமாவில் முன்னேறினார். கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவம் படைத்தவர். அவருடைய பல சினிமாக்கள் மலையாளிகளின் மனதில் அனைத்து காலங்களிலும் நிலைநிற்கும். என்னைப் பொறுத்தவரை நடிகர் ஸ்ரீநிவாசனின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நேர்காணலுக்காக நாங்கள் இணைந்தது இன்றும் மனதில் இனிமையான நினைவாக உள்ளது. அன்புக்கும், அரவணைப்புக்குமான பிரதிபலிப்புதான் ஸ்ரீநிவாசன்" என முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கை மாறியது பிக்பாஸ் வீடு இருக்கும் EVP வளாகம் - வேல்ஸ் ஃபிலிம் சிட்டி உதயம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டான `பிக்பாஸ் வீடு' சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கத்தில் இருந்த ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள்.இந்த ஈவிப... மேலும் பார்க்க

என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா

ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட... மேலும் பார்க்க