`ஏன் பாரதி, என் பாரதி..!' - மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!
என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தன்னை அறிவதுதான் எல்லா ஞானத்திற்கும் ஆரம்பம்.
அரிஸ்டாட்டில்
டிக்கெட் கிழித்துப் பேருந்தில் நடத்துநராக வேலை செய்தபோதே தலையைக் கோதிவிட்டு டிக்கெட் கொடுக்கும் ஸ்டைலிலேயே மக்களைத் தன்வசப்படுத்தி, உங்கள் வாழ்வின் பயணத்தில் ஏறிய ரசிகர் கூட்டம் இன்றும் உங்கள் சினிமா என்ற பேருந்தில் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள்.
நம் வாழ்வில் இலக்கை நோக்கிப் பயணித்து, வாழ்வில் பல போராட்டங்களுக்குப் பின் அவரவர் கனவுகளில் வெற்றி அடைவது கடினம். ஆனால், “தான் யார்” என்று அறிந்துகொண்டு நம் தனித்துவத்தோடு போராடிப் பல ஆண்டுக் காலம் உலக மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுபவர்கள் சிலரே. அந்த சிலருள் ‘திரு. ரஜினிகாந்த்’ அவர்களும் ஒருவரே.

பொது வாழ்வில் ஜெயித்தவர்கள் அனைவரும் மக்கள் மனதில் இடம் பெருவதில்லை. என் வீட்டில் மாமா பையன் 1வயதில் அவனை ஒரு இடத்தில் அமரச்செய்து அவனுக்கு உணவூட்டவோ, வீட்டு வேலைகளையோ செய்யவே முடியாது ஓடிக்கொண்டே இருப்பான் , ஒரு நாளில் இதுபோலவே ஓடிக்கொண்டே இருந்தான் தொலைக்காட்சியில் ‘ரஜினி’ அவர்களின் படம் ஓடியபோது சட்டென்று அமர்ந்து விட்டான் படம் முடிவது வரைக்கும் எங்கேயும் அவன் நகர வில்லை .
பேசி ஒழுங்காக நடக்ககூட தெரியாத சிறு குழந்தை மனதில் புகும் சக்தி ‘ரஜினி’ அவர்களின் மாபெரும் சக்தி.
பளிச்சென்று வெள்ளைத்தோல், வகிடெடுத்தத் தோற்றம் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி அடைய முடியும் என்ற இலக்கணத்தை மாற்றிய சிலருள் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
கனவை அடையவிடாமல் தடுக்கப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், நம் தோற்றத்தைப் பலவீனமாக நினைத்துக் கனவை நோக்கிப் பயணிக்காமலேயே துவண்டுபோய்க் கொண்டிருந்த சமூகத்தை, “ரஜினிகாந்த்” அவர்கள் தமது வெற்றியால், "சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்கு உடல் நிறமோ, மற்ற எந்தக் குறையும் நம்மைத் தடுக்காது; திறமை ஒன்று மட்டும் இருந்தால் போதும், எவ்வளவு கடினமான இலக்கையும் அடையலாம்" என்று நம்பிக்கை விதையை மக்கள் மனதில் விதைத்தவர்.

2000ஆம் வருடங்களில் தொலைக்காட்சிப் பெட்டி எல்லா வீடுகளிலும் வாடகை கொடுக்காத குடும்ப உறுப்பினராய் குடிவரவில்லை. ஒரு தெருவில் சிலரது வீடுகளில் இருக்காது.
தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் வீடுகளில், தொலைக்காட்சி இல்லாதவர்கள் வந்து அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பர், மனிதர்களுக்குள் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளையெல்லாம் மறக்கவைத்து என் பக்கத்து வீட்டு ‘ஆயிஷா’ என்பவரின் குடும்பத்தோடு உறவாக மாற்றியது “படையப்பா’ படம் தொலைக்காட்ச்சியில் போட்ட போதுதான், ‘ஆயிஷா’ அவர்கள் குடும்பத்தோடு உறவினராகவே மாறிப்போனோம், நான் ‘ஆயிஷா’ அவர்களை நான் பெரியம்மா என்றுதான் அழைப்பேன்.
என் பெரியம்மா ‘ஆயிஷா’ அவர்களின் மகள் என் அக்கா ‘பாத்திமா’ அவர்களின் திருமனத்தின் போது ஜாதி , மதமின்றி அவர்கள் குடும்பத்தோடு இனக்கமாக திருமனத்தில் இருந்தோம். என் தெருவிலிருந்த என் வயது சின்ன பசங்களோடு நட்பானது ‘படையப்பா’ படத்தை தொலைக்காட்சியில் போட்டபோதுதான். ஒரு தலைமுறை சமுதாயத்தை ஜாதி,மத வேறுபாடுகள் பார்க்காமல் உருவாக்கியது ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தால் தான்.

பல படங்களில் ரஜினி அவர்களின் கதாபாத்திரம் போராடி, நேர்மையாக வாழ்வில் வெல்பவராகவே இருப்பார். வெற்றிக்கு உழைப்பும், நேர்மையும் மட்டுமே மூலதனம் என்பதைத் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் கூறிக்கொண்டே இருக்கிறார்.
“வாழ்ந்தவர் கெட்டால்” என்பதுபோல் நன்றாக வாழ்ந்து வந்து, சில நேரங்களில் மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நின்றாலும், புதிதாகப் போராடி வாழ்ந்த வாழ்க்கையைவிட மேலும் உயர முடியும். வாழ்க்கை நேர்கோடாகச் செல்லாது; கோணலான கடினமான பயணம்தான் வாழ்க்கையை நேராக்கும் என்பதன் சாட்சி ரஜினி அவர்களின் கதாபாத்திரங்கள்.
ரஜினி அவர்கள் மேடைகளில் பேசும்போது சில குட்டிக் கதைகள் கூறுவார். என்னை மிகவும் ஈர்த்த கதை : (தவளை ஒன்று மலை ஏறும்போது எல்லாரும் ஏதேதோ கூறுவர். ஆனால், அந்தத் தவளைக்குக் காது கேட்காது என்பதால், அது யார் சொன்னதையும் கேட்காமல் சென்று மலை ஏறிவிடும்.)
அதுபோல், நம் கனவுப் பயணத்தில் காது கேட்காத தவளையாக மாற வேண்டும் என்ற தெளிவை உணர வைத்தவர் ‘ரஜினி’ அவர்களே..
டீன் ஏஜ் பருவம் அடையும் போது எனது ஐந்து விரல்களோடு ஆறாம் விரலாய் ‘சிகரட்டை’ சேர்க்க முயற்ச்சியில் இருந்த போது ‘ரஜினி’ அவர்கள் பெரும் உடல் சிகிச்சை மேற்க்கொண்டு , எந்த தீய பழக்கத்திலும் அடிமை ஆகாதீங்க’ என்று கூறிய ஒரு வார்த்தையால் என் வாழ்நாள் முழுதும் எந்த தீய பழக்கத்திற்க்கும் அடிமை ஆக கூடாது என்று சபதம் எடுத்தேன்.

என் மனதில் டீன் ஏஜில் ‘மது , சிகரட்’ போல் எதிர் பாலினர் மீதும் வசீகரம் ஏற்படும் இயற்கையாக , ‘பாட்ஷா’ படத்தில், ‘ரஜினி’ அவர்கள் ‘நக்மா’விடம் “பொன்னு, பெண்,புகழ் பின்னாடி நம்ம போக கூடாது அதுதான் நம்மள தேடி வரனும்” என்ற வசனம் தெளிவான வாழ்க்கை முறையை அந்த வசனம் தான் என்னை ஒழுக்காமாக வைத்துள்ளது..
வாழ்வில் நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் நம்மோடு நெருக்கமான இரத்த உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது நமக்கு ஏற்படும் வலி மிகவும் கொடியது. “ஆறிலிருந்து அறுபது வரை” படத்தில் “சந்தானம்” என்ற கதாப்பாத்திரம் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது ஒவ்வொரு தம்பிகளாக விலகுவர் ஆனால் ‘சந்தானம்’ கதாப்பாத்திரம் போராடி வெல்லும்.
நம் வாழ்வின் நெருக்கடியான நேரங்களில் யார் விட்டு நம்மை பிரிந்த்தாலும் நமக்கு நமது நம்பிக்கை போதும் என்ற விதையை என் சிறு வயதில் விதைத்தது “ஆறிலிருந்து அருபது வரை” ‘சந்தானம்’ கதாப்பாத்திரம்.

சில நேரங்களில் ‘ரஜினி’ அவர்களின் படத்தில் வரும் காட்சிகளை என் வாழ்க்கையில் விளையாட்டாக பின்பற்றி உள்ளேன் , எனக்கு இயல்பாக சுருட்டை முடி ஆனால் ‘ரஜினி’ அவர்களை போல் தலையை ஆட்டி ஆட்டி முன்னாடி முடியை இழுத்து விட முற்படுவேன் ஆனால் முன்னாடி முடி வரவே வராது எத்தனையோ முடித்திருத்தும் கடைகளில் சென்று “முன்னாடி ‘ரஜினி’ மாறி முடி ஆடனு அண்ணா’’ என்று கூறி வெட்டுவேன் முடி வெட்டி சில நாட்களில் சுருண்டு விடும் . ‘சிவாஜி’ படத்தில் வெள்ளையாக ‘ரஜினி’ அவர்கள் செய்த முயற்சி அனைத்தையும் நானும் செய்துள்ளேன் வேடிக்கையாக..
பல இளைஞர்களின் மனநிலையின் ஒரு சாட்சியாக நான் கூறுகிறேன் என் கனவை தைரியமாக பிறரிடம் சொல்ல , என் தாழ்வு மனப்பான்மையை அகற்ற , தன்னம்பிக்கை மேலோங்க, என் உடல் நிறம் பற்றிய கவலை ஒழிய காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான் …
என் போல் என் இயாலாமையிலிருந்து வெளிவரக்காரணம் ‘ரஜினி’ அவர்கள்தான், இன்னமும் பல இளைஞர்கள் அவரவரின் இயாலாமையிலிருந்து வெளி வந்து வான் போல் உயர வேண்டும் அவர்களின் முன்னோடி ‘ரஜினியாகா’ இல்லாமல் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
என் வாழ்வில் இயாலாமையிலிருந்து வெளி வந்த நண்பர்கள் ‘ரஜினி’ இல்லாமல் வேறு ஒருவர் பெயர் கூறினாலும் நான் மகிழ்வேன் ஏனென்றால் ‘சமத்துவம்’ நான் கற்றதும் ‘ரஜினி’ அவர்களால் தான்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்!
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
my@vikatan.com


















