ஐஸ்வர்யா ராய்: "பொறுத்துக்கொள்ள முடியாது" - விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு அபி...
கை மாறியது பிக்பாஸ் வீடு இருக்கும் EVP வளாகம் - வேல்ஸ் ஃபிலிம் சிட்டி உதயம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட்டான `பிக்பாஸ் வீடு' சென்னை பூந்தமல்லி அருகே இருக்கும் செம்பரம்பாக்கத்தில் இருந்த ஈவிபி வளாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை அறிவீர்கள்.
இந்த ஈவிபி வளாகத்தை தற்போது ஐசரி கணேஷின் வேல்ஸ் குழுமம் வாங்கியுள்ளது. அதில் புதிதாக அமைக்கப்பட்ட வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் தியேட்டர்ஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டி ஆகியவற்றை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகரும், எம்.பியுமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெங்களூருவைச் சேர்ந்த சந்தோஷ் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான ஈவிபி ஃபிலிம் சிட்டி ஆரம்பத்தில் பொழுது போக்கு தீம் பார்க்காக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்து ஒன்றின் தொடர்ச்சியாக தீம் பார்க் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
எனவே சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வந்தனர். எனவே ஈவிபி ஃபிலிம் சிட்டி என அழைக்கப் பட்டு வந்தது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலிருந்தே இங்குதான் நடைபெற்று வருகிறது. தவிர சீரியல் மற்றும் சினிமா ஷூட்டிங்குகள் இங்கு நடந்து வந்தன. ’காலா’ படத்தின் தாராவி செட் உள்ளிட்ட பல படங்களுக்கு இங்கு செட் போடப்பட்டு படமாக்கப்படும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வளாகத்தை மொத்தமாக சந்தோஷ் ரெட்டியிடமிருந்து வேல்ஸ் குழுமம் வாங்கியது.
வாங்கியதும் சில மறுசீரமைப்பு வேலைகளைச் செய்து தற்போது வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என பெயரை மாற்றியுள்ளனர்.
இந்த வளாகத்தை இன்று சென்னையில் திறந்து வைத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வளாகம் கை மாறினாலும் வழக்கம் போல் சினிமா மற்றும் சீரியல் ஷூட்டிங் நடைபெறுவது தொடரும் என்கிறார்கள்.!



















