செய்திகள் :

பூங்கொத்தோடு காத்திருக்கிறேன்! - ரஜினி ரசிகர் மன்ற தலைவியாக இருந்த பெண் நெகிழ்ச்சி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சங்கடங்கள்
வரும்போது தடுமாறாதே!
சந்தர்ப்பங்கள்
வரும்போது தடம் மாறாதே.!.. 
புரிய வைத்தத் திரைப்படம்
'புவனா ஒரு கேள்விக்குறி'.

ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில் மிகப்பெரிய ஆச்சரியக் குறியை உண்டாக்கிய படம்.
மௌன கவிதையான
ரஜினியை
ரசிக்கும் ரசிகையாக
நான் மாறியது.. அப்போதிலிருந்துதான்.

ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான (அருமையான)  முன்னுரை எழுதிய படங்களில் மிக முக்கியமான படம்

மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்தக் குணமும் இல்லாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெற, எல்லா நல்ல குணங்களும் அமையப்பெற்ற ஒருவன் வாழ்க்கையில் வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படாமலிருக்க...
இப்படி இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைக்க,
சூழ்நிலை பிரித்துப் போடுவதுதான்  படத்தின் ஒன்லைன் .

அறியாத வயசுல... நடிகர் ரஜினியை முதன்முதலாக படத்தில் பார்த்து பிரம்மித்தேன்.  கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக இயல்பா நடித்த அவர் மனதிற்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதை என்னன்னு சொல்றது!!?

புவனா ஒரு கேள்விக்குறி

"இருப்பதிலேயே
மிகவும் கஷ்டமான,
சலிப்பான
வேலைன்னா
அது மனிதனாக இருப்பதுதான்.
ஆனா மனிதனாக மட்டுமல்ல,
அழகான மனிதனாக அந்தப் படத்தில் வாழ்ந்து காட்டி  மனதை கொள்ளை கொண்டதால்... படத்தை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியவில்லை.


கல்லூரிக் காலக்கட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவியா ஆனதற்கு இந்தப் படம் தான் முழு முதற்காரணம் ன்னு சொல்வேன்.

எல்லாப் படத்திலும் நல்லவனா இருக்கிற சிவக்குமார் இதுல கெட்டவன் ... எல்லாப் படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்.. என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம். எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத மிக நேர்த்தியான திரைக்கதை .  படம் கருப்பு வெள்ளை தான் ஆனாலும் ஒளிப்பதிவு கொள்ளை அழகு .

"அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவதாகட்டும் ... காதலியை இழந்து சிறகு உடைந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்...
உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்...

'அண்ணே',' நாகராஜ் அண்ணே' என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும்..

(அண்ணே',' நாகராஜ் அண்ணே 'என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினி யிசத்தின் துவக்கம் ன்னே சொல்லலாம்)


சுமித்ராவிடம் ஏக்கமிகுந்த  குரலில் தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும்...


படம் முழுக்க ரஜினி  'கதகளி' ஆடுவார். கை விரல்களை அப்படி இப்படின்னு சொடுக்கி வசனம் பேசற ஸ்டைல் 'ச்சோ ஸ்வீட்'

ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய்...
காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய்...
சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவக்காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய்..


அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய்... நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி
இப்படியாக அந்தப் படத்தில் ஆரம்பித்த  அவர் மீதான  காதல் இன்னமும் தொடர்கிறது ... இனியும் தொடரும்... அவரின் தாடி (வேற லெவல் ) பொருத்தம்.

தன்காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஒரளவு கட்டுப்படுத்திவைத்திருப்பதையும், ,காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது, ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

அண்ணே நாகராஜ் அண்ணே...கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே... அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது.

புவனா ஒரு கேள்விக்குறி

ஒருகட்டத்துல வயித்தையேகிழிச்சுப்புட்டு பதம் பார்த்துரும். என்று ரஜினி சொல்லும் போது எல்லாம்.... விசில் சத்தத்தால் காது கிழிந்ததை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.


(எனக்கு தெரிஞ்சவங்க யாராவது யாருக்கும் தெரியாதுன்னு தவறு செஞ்சா... இந்த வசனம் தான் என் மனசுக்குள்ள வரும்)

சுமித்ராவும் ரஜினியும்கோயிலிருந்து வெளியே வர ,சிவகுமாரும் ஜெயாவும் கோயிலுக்குள் நுழைய ,கோயில்ல என்ன வேண்டுதல்ன்னு சிவக்குமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்க?
ரஜினி வேணும்ன்னே ' ஒரு பையன் தான் இருக்கான் அடுத்து ஒரு பெண் குழந்தை கொடு'ன்னு
வேண்டி கொள்வதற்காக வந்தோம் ன்னு சொல்வார்.

அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் போல் வளர்க்கும் பையனிடம், டேய் பாபு அங்கிளுக்கு 'டாடா 'சொல்லுடான்னு சிவகுமாரை பார்த்து  சொல்லி நக்கல் அடிப்பார்பாருங்க
சான்சே இல்லைங்க... அவருக்கே உரித்தான ஸ்டைல். இந்தக் காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் பறந்ததை மறக்க முடியாது.

 விழியிலே மலர்ந்தது ராஜா என்பார் மந்திரி என்பார் இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகிப் பாடி இருப்பார். (நன்றி எஸ் பி பி சார்,)

ஆரம்ப கால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது படம் வெளியாகி 48 வருடங்கள்... ஆனால் என்ன... இன்றைக்கும் என்றைக்கும் 

ரஜினி தான் மாஸ். பக்கா மாஸ்.!
அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தலைவா... உங்களை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதுதான் என் வாழ்வில் பொக்கிஷத் தருணம் .
நிச்சயம் அந்த நாள் வரும்... பூங்கொத்தோடு காத்திருக்கிறேன் .

பிரியமான ரசிகை
ஆதிரை வேணுகோபால்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்!

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

my@vikatan.com

என் தாழ்வு மனப்பான்மையை போக்கியவர் ரஜினி! - இளைஞரின் சொல்லும் காரணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

டான்ஸ் ஆடத் தெரியாதவர் என்று கிண்டல் செய்த நானே ரஜினி ரசிகை ஆன கதை! - பேரன்புக்கு சொந்தக்காரர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனதைக் கொள்ளை கொண்ட பாட்ஷா - படம் இமயம் ஏறியது எப்படி?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கந்தன் மலை: ``34 சென்ட்டைத் தவிர மீதமுள்ள மலை முருகனுக்குத்தான் சொந்தம்!'' - ஹெச்.ராஜா

ஹெச். ராஜா இப்போது சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'கந்தன் மலை' என்ற படத்தின் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் வீர முருகன் இயக்கயிருக்கிறார். இத்திரைப்படத்தின் ட... மேலும் பார்க்க

Netflix: BatMan முதல் Ben10 வரை - வார்னர் ப்ரோஸை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ்; ரூ.6 லட்சம் கோடி ஒப்பந்தம்!

திரைத்துறை வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான வார்னர் ப்ரோஸ் டிஸ்கவரியின் (Warner Bros Discovery) தொலைக்காட்சி மற்றும் திரைப்பட ஸ்டுடியோக்களை, அதன் ஸ்ட்ரீமிங் பிரிவுடன் சேர்த்து 72 பில்லிய... மேலும் பார்க்க

Vedan: ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராப் பாடகர் வேடன்; துபாயில் தீவிர சிகிச்சை!

மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க