செய்திகள் :

'ஒரு லிட்டர் பெட்ரோல் 265 ரூபாய்' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்! - எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

post image

''அவனுக்கென்னப்பா, கோடீஸ்வரன். எந்தக் கவலையும் இல்லாம ஜாலியா இருக்கான்'' என்று சில நண்பர்களைப் பற்றி சிலர் கொஞ்சம் பொறாமையுடன் பேசுவதைக் கேட்டு இருப்பீர்கள்.

கோடீஸ்வரன் என்பது இன்றைக்கு ஒரு கெத்து ஃபீலிங்தான். ஆனால், இந்த கெத்து 20 வருஷம் கழிச்சும் அப்படியே இருக்குமா என்று கேட்டால், காத்து எறங்குன ட்யூப் மாதிரி இன்றைய 1 கோடி ரூபாய் மதிப்பு 5% பணவீக்கத்தில் வெறும் 37 லட்சம் ரூபாயாத்தான் இருக்கும்! இதைக் கேள்விப்பட்றப்ப ''அய்யய்யோ...'' என்கிற மாதிரி இருக்கில்லையா?

பணத்தோட மதிப்பு ஏன் இப்படி அநியாயத்துக்கு இறங்குது, பணத்தோட மதிப்பு குறையாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு கேக்குறீங்களா? மேற்கொண்டு படிங்க.

பணக்காரர்

மொத்தல்ல, பணத்தோட மதிப்பு ஏன் இறங்குதுன்னு பார்க்கணும். பணத்தோட மதிப்பு ஏன் இறங்குது? நாம அன்றாடம் வாழ்க்கையில பொருள்களோட விலை அதிகமாகிறதால நம்மகிட்ட இருக்கிற பணத்தோட மதிப்பு இறங்குது.

உதாரணமா, 25 வருஷம் முன்னாடி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் 30 ரூபா. ஆனா, இன்றைக்கு அதே பெட்ரோ விலை 100 ரூபாய்க்கு மேல. 25 வருஷத்துக்கு முன்னால 100 ரூபாய்க்கு 3 லிட்டர் பெட்ரோல் வாங்கி இருப்போம். ஆனா, இன்னைக்கு ஒரே ஒரு லிட்டர் பெட்ரோல் கூட வாங்க முடியல்ல.

சரி, இந்த பெட்ரோல் விலை இப்ப இருக்கிற மாதிரியே 100 ரூபாயிலதான் இருக்குமா? நிச்சயம் இருக்காது. வருஷத்துக்கு 5% என்கிற கணக்குல பெட்ரோல் விலை ஏறுதுன்னா அடுத்த 10 வருஷத்துக்குப்பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 163 ரூபாயா இருக்கும். 20 வருஷம் கழிச்சுப் பார்த்தா, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 265 ரூபா இருக்கும்!

''ஆத்தாடி! பெட்ரோல் விலை இவ்வளவு ஏறிடுச்சே! இனிமே சைக்கிள்தான் நமக்கு சரி'' என்று நினைத்து நம்மில் யாராவது சைக்கிளைப் பயன்படுத்த தயாராக இருப்பார்களா? ஓரிருவர் தயாராக இருப்பார்கள். எல்லோருமே சைக்கிளை மிதிக்கத் தயாராக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது! அப்படியானால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 265 ரூபாய் தந்து வாங்க நாம் தயாராக இருக்க வேண்டும். அந்தளவுக்கு நம்மிடம் பணம் இருக்க வேண்டும்!

இப்படி பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணம் என எல்லாவற்றின் விலை கண்ணாபின்னாவென்று ஏறினால், இப்போது இருக்கும் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு எப்படிக் குறையாமல் இருக்கும்? 20 வருஷம் கழிச்சு அது வெறும் 37 லட்சம் ரூபாயத்தானே இருக்கும்!

பொருள்களோட விலை உயர்றதை நம்மால தடுக்க முடியாது. அதனால பணத்தோட மதிப்பு குறையுறதும் நம்மால தடுக்க முடியாது. ஆனா, நாம கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துகிட்டா, பணத்தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இல்லாம இருக்கலாம். எப்படி?

20 வருஷம் கழிச்சு நம்மகிட்ட ரூ.2.65 கோடி இருந்துதுன்னா, நாம பணம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லாம ஜாலியா இருக்கலாம். இந்த 2.65 கோடி ரூபாயை நீங்க எப்படி சேர்க்கப் போறீங்க? அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்கீங்க என்கிறதுதான் முக்கியமான கேள்வி!

சிந்திச்சுப் பாருங்க மக்களே! இதுக்கு உங்ககிட்ட என்ன திட்டம் இருக்குன்னு கமென்ட்ல போடுங்க மக்களே!

Labham - 3: EMI + SIP... வீட்டுக் கடனை எளிதாகக் கட்டி முடிக்கும் சூப்பர் ஃபார்முலா

35 வயதானாலே போதும், 'சொந்தமா இன்னும் வீடு வாங்கலையா...? கடனைக் கிடனை வாங்கி, மொதல்ல, ஒரு வீடு வாங்குப்பா...' என்று நெருக்குதலைத் தர இன்று பல வீடுகளில் 'பெரியவர்கள்' தயாராக இருக்கிறார்கள். இன்றுள்ள நில... மேலும் பார்க்க

NRI - 10: ரிஸ்க்கே எடுக்க மாட்டேன் என்பவரா நீங்கள்? எத்தனை லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள் தெரியுமா?

மனிதர்கள் இரண்டு வகை. 'எந்த விஷயத்திலும் நான் ரிஸ்க்கே எடுக்க மாட்டேன்' என்பவர்கள் ஒரு வகை. 8 மணிக்கு ரயில் என்றால், 7.30 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விடுவார்கள். 40 கிலோ மீட்டருக்கு மேல் வண்டிய... மேலும் பார்க்க

`25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம்' புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; அனுமதி இலவசம்; பரிசு உண்டு

சம்மர் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் எல்லோரும் ஏசி, குளிர் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவோம். இதனால் மின்கட்டணமும் எகிறும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் இலவச மின்சாரம் மூலம் மின் கட்டணத்திலிருந்த... மேலும் பார்க்க

கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் - 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல... தெரியாமல் செய்யும் தவறுகள் தான். அவை என்னென்ன என்பதை பட்டியலிடு... மேலும் பார்க்க

Labham - 2: தங்கம் விலை இந்த 10 ஆண்டில் எத்தனை மடங்கு உயரும்? #அக்‌ஷய திருதியை #Akshaya Tritiya

தங்கம் என்பது நம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நமக்கு மொத்தமாக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் வாங்கிக் குவிக்கிறார்கள் நம் மக்கள். இன்னும் சில நாள்களில் அக்ஷய திருதியை ப... மேலும் பார்க்க

NRI Corner 9 - உங்கள் பெற்றோர், குழந்தைகளுக்கு மாதந்தோறும் பணம் தர இந்த ஒரு ஃபண்ட் இருந்தால் போதும்!

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, தமிழ்நாட்டில் இருக்கும் பெற்றோருக்கு மாதந்தோறும் பணம் தரவேண்டும்; அல்லது, கல்லூரியில் படிக்கும் மகள்/மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும... மேலும் பார்க்க