செய்திகள் :

"ஒரே பேஸ்ட் எல்லாருக்கும் சரியா? உங்கள் குழந்தைக்கு அது பாதுகாப்பா?" - மருத்துவர் விளக்கம்

post image

குழந்தைகளுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது அம்மாக்களின் இயல்பு. பால் குடிக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும், அணியும் துணி மிருதுவாக இருக்க வேண்டும், சாப்பிடும் பொருள்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். ஆனால், தினமும் இரண்டு முறை நேரடியாக வாய்க்குள் போகும் டூத் பேஸ்ட்களை பெரும்பாலான அம்மாக்கள் கவனிப்பது இல்லை.

இன்று சூப்பர் மார்க்கெட்டுல கிடைக்கும் பிரபலமான டூத் பேஸ்ட் பிராண்டுகள், ‘6 வயதுக்கு மேல் மட்டும் பயன்படுத்தவும்’ என்ற எச்சரிக்கை அட்டையிலே இருக்கிறது… ஆனால் நாம பெரும்பாலும் அதை கவனிக்காமல் வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்களைத் தான் குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம்.

எது நல்ல டூத் பேஸ்ட்? தேர்ந்தெடுக்க ஈஸி டிப்ஸ்

பொதுவாக குழந்தைகளுக்கு பிரஷ் வாங்கும்போது, நிறம், மிருதுத்தன்மை, டிசைன் போன்றவற்றை, பயன்படுத்தும் வயது பார்த்து வாங்குறோம். ஆனால் பேஸ்ட் வாங்கும் நேரத்தில்...? வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்துற அதே பேஸ்ட்தான், எளிதாக குழந்தைகளுக்கும் கையில் கொடுக்கப்படுகிறது.

'பேஸ்ட் தானே' என்று தோன்றும் சின்ன முடிவு பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குழந்தைகளின் பேஸ்ட் விஷயத்தில் பெற்றோர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ராம். 

" பொதுவாக எல்லா டூத் பேஸ்ட்களிலும் ஃப்ளூரைடு (fluoride) சேர்க்கப்படும். ஃப்ளூரைடு என்பது பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் ஒரு முக்கிய கனிமச் சேர்மம். இது பல் மேல் இருக்கும் எனாமல் (enamel) பகுதியை வலுப்படுத்தி, பல் சிதைவு ஏற்படாமல் தடுக்கும். நாம் சாப்பிடும் இனிப்பு உணவுகளால் உருவாகும் அமிலம் பற்களை மெதுவாக சேதப்படுத்தும். ஆனால் டூத் பேஸ்ட்டில் உள்ள ஃப்ளூரைடு பற்களை பாதுகாக்கும். அதனால் தான் பெரும்பாலான டூத் பேஸ்ட்களில் ஃப்ளூரைடு சேர்க்கப்படுகிறது. 

பல் மருத்துவர் - ராம்

குழந்தைகளின் பற்கள் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில இருக்கும். அதனால், பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை நேரடியாக குழந்தைகளுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. பெரியவர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்களில் ஃப்ளூரைடு அளவு அதிகமாக இருக்கும். குழந்தைகள் பல் துலக்கும் போது பேஸ்ட்டை விழுங்குவது ஒரு பொதுவான பழக்கம். இதனால் ஃப்ளூரைடு  (fluoride) அதிகமாக உடலுக்குள் சென்று, பற்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும். இந்த நிலையை ‘பல் ஃப்ளூரோசிஸ்(‘dental fluorosis) என்பார்கள். அதாவது பற்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தோன்றும்.

இதோடு மட்டும் இல்லாமல், பெரியவர்களின் டூத் பேஸ்ட்களில் இருக்கும் ஃப்ளேவர்கள் மற்றும் SLS (foaming agent) ரசாயனங்களை குழந்தைகள் தொடர்ந்து விழுங்கும் போது, வாயில் எரிச்சல், வாய்ப்புண், செரிமானக் கோளாறு வயிற்றுப்புண், வாந்தி அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். இதனால் குழந்தைகள் பல் துலக்கவே விரும்பாமல் போகும் அபாயமும் உள்ளது.

டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்

எனவே குழந்தைகளுக்கான டூத் பேஸ்ட்களை வயதுக்கு ஏற்ப தேர்வு செய்வது மிக முக்கியம். 0 முதல் இரண்டு வயது குழந்தைகளுக்கு ஃப்ளூரைடு இல்லாத அல்லது மிகக் குறைவான அளவு கொண்ட பேஸ்ட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். சிறிய அரிசி அளவிற்கு தினமும் இரண்டு முறை பேஸ்ட் பயன்படுத்தினால் போதும்.

மூன்று முதல் ஆறு வயது வரை சுமார் 1000 ppm( parts per million) கொண்ட பேஸ்ட்கள் பாதுகாப்பானது. இவர்களுக்கு தினமும் இரண்டு முறை பட்டாணி அளவிற்கு பேஸ்ட் பயன்படுத்தலாம்.

மேலும், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டூத் பேஸ்ட்களில் எஸ்எல்எஸ் (Sodium Lauryl Sulfate) போன்ற ரசாயனங்கள் குறைவாக இருப்பது நல்லது. ஃப்ளேவரே இல்லாத பேஸ்ட்கள் பெஸ்ட் சாய்ஸ். இவை மெடிக்கல்களில் கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் வாங்குவது நல்லது.

பேஸ்ட் தேர்வு செய்வதோடு மட்டுமல்லாமல், அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். பெற்றோர் கண்காணிப்பில் துலக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பேஸ்ட் அறிமுகம் செய்த பிறகு ஒரு வருடத்திற்கு ஒரு முறை குழந்தைகளின் பற்களை மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது. குழந்தைகளின் பல் பிரச்னைகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் பேஸ்ட் பரிந்துரை செய்வார்கள்.

டூத் பேஸ்ட்

6 வயதுக்கு மேல் தான் பெரியவர்களுக்கான டூத் பேஸ்ட்டை மெதுவாக அறிமுகப்படுத்தலாம். அதற்குள் குழந்தைகளுக்கு சரியாக பல் துலக்கும் பழக்கம் உருவாகி இருக்கும். பல துலக்கும் முறை, சரியான பிரஷ் தேர்வு, பேஸ்ட் தேர்வு இருந்தால் குழந்தைகளின் பற்களை பாதுகாக்கலாம்" என்று விளக்கினார்.

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்; எல்லோரும் எடுக்கலாமா?

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில் பிரபலமாகவும் பிரதானமாகவும் இருக்கிறது திரிபலா சூரணம். மலச்சிக்கல் முதல் வாய்ப் புண் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும்அதை எடுத்துக்கொள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளது. இதைக் குணப்படுத்த வாய்ப்புண்டா... எப்படிப்பட்ட சிகிச்சைகள் உதவும்?பதில் சொல்கிறார், சென்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

Doctor Vikatan:நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள் எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும்,'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கி... மேலும் பார்க்க

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது... பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர... மேலும் பார்க்க