செய்திகள் :

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

post image

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிஷாந்தின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ஓமனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாகக் கூறி உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மாலுமி நிஷாந்த்
மாலுமி நிஷாந்த்

இதையடுத்து, உடற்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் அங்குள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உடற்கூறு ஆய்வு நிறைவடைந்த பின்னர் இந்திய தூதரகம் மூலமாக நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசின் செலவில் நிஷாந்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்கு அப்பாவு கேள்வி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காத த.வெ.க, ஆட்சி அமைக்க தி.மு.க கூட்டணியில் தேர்தலை எதிர்க்கொண்ட கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கின. அதேநேர... மேலும் பார்க்க

'அமைச்சர் பதவிகள் சரிதான்; ஆனால், துறை?' - முதல்வர் ரங்கசாமியின் `நோ போர்ட்ஃபோலியோ’ பாலிசி தொடருமா?

புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுதியிலும், அ.தி.மு.க மற்றும் ஜோஸ் சார்லஸ் மார... மேலும் பார்க்க

"G7 நாடுகள் இனி உலகை ஆள முடியாது" - சர்வதேச அரசியலில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து கனடா பிரதமர்

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க G7 அமைப்பு நாட்டின் தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த அமைப்பில்... மேலும் பார்க்க

'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' - தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட த... மேலும் பார்க்க

'தனி விமானம், ரூ.15 கோடி' - பணத்திற்கு விலைபோகும் எம்.பி.க்கள்? பாதுகாக்க போராடும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 2022ம் ஆண்டு பிளவைச் சந்தித்தபோது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து இரவோடு இரவாக காரில் குஜராத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பிறகு ஆ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் மோடி - மெலோனி சந்திப்பு; உலக அரங்கில் கவனம் ஈர்த்த 'மெலோடி' கூட்டணி!

உக்ரைன் விவகாரம், அமெரிக்கா-ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்க ஜி7 தலைவர்கள் பிரான்சில் கூடியுள்ளனர். இந்த உத்தியோகபூர்வ விவாதங்களுக... மேலும் பார்க்க