தவெக-வில் அதிமுக MLA: ``கூட்டணிக் கட்சிகள் மீது நம்பிக்கையின்மையா?" - தவெக-விற்க...
Heartin: `விஜய் படமா? உதயநிதி படமா? யார் படம் புடிக்கும்?' - தங்கம் தென்னரசு மகள் இமையா பதில்
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசின் மகளான இமயா 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஜூன் 26 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய இமயா, ``என்ன மாதிரியான புது முகங்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் ரவீந்திரன் சாருக்கு முதல்ல நன்றி தெரிவிச்சுக்கிறேன். இந்தப் படம் நிச்சயமா மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் இருக்கின்ற பாடல்கள், கதாபாத்திரங்கள்ன்னு நிறைய விஷயங்கள் மக்களுக்கு ரொம்ப நெருக்கமா ஃபீல் ஆகும்.
இந்த மாதிரி படக்குழு அமையறது ரொம்ப அரிது. எனக்கு இது முதல் படம் என்பதால இந்தப் படத்தில் நடித்ததில இருந்தும் இந்தப் படத்துல நடிச்ச மற்ற நடிகர்களிடத்தில் இருந்தும் நிறைய கத்துக்கிட்டேன்.

இந்தப் படத்துல நடிச்சிருக்க பல நடிகர்கள் எனக்கு இப்ப நல்ல நண்பர்கள் ஆயிருக்காங்க. சாரதி சார், மோகன் ராஜ் சார், விவேக் சார் இணைந்து இந்தப் படத்துக்கு அருமையான பாடல்கள் கொடுத்திருக்காங்க. உத்ரா மேம் மற்றும் முகேஷ் சார் தான் என்னை இந்தப் படத்துல சரியா காட்சிப்படுத்த அதிகபட்ச முயற்சி செய்திருக்காங்க.
இந்தப் படத்துல என்னோட நடிப்புக்கான பாராட்டுக்கள் அவர்களைத்தான் சென்றடையனும். ராஜேஷ் சாரை 'பிரேமம்' 'நேரம்' போன்ற பெரிய பெரிய படங்கள்ல பாத்திருக்கேன். இப்போ ஒரே படத்தில் அவர் கூட நடிக்கிறது நான் ரொம்ப பெரிய ஆசீர்வாதமா பார்க்கிறேன். 'பிரேமம், காதலும் கடந்து போகும்' போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துல மடோனாவை நீங்க வேற வெர்ஷன்ல பார்ப்பீங்க.
நிச்சயமா இந்தப் படம் மடோனாவிற்கு நல்ல அங்கீகாரம் பெற்று தரும். பல படங்களில் துணை நடிகரா நடிச்சிருந்த சனந்த் இந்தப் படத்துல கதாநாயகனா நடிக்கும்போது அவருக்கு கதாநாயகியா நான் அறிமுகமாவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.
இந்தப் படத்தில் நடிப்பதைத் தாண்டி எழுத்துக் குழுவிலும் என்னுடைய பங்கு சிறிதளவுல இருக்கு. அதுக்கு வாய்ப்பளித்த கிஷோருக்கும் நன்றி" என்றார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகை இமயா, "நான் படத்துல நடிக்கணும்னு முதல்ல சொன்ன உடனே வீட்ல வேணாம்னு சொன்னாங்க. நான் தொடர்ந்து முயற்சி பண்ணிட்டு இருக்கிறதைப் பார்த்து பிறகு ஏத்துக்கிட்டாங்க. ஆனா தொடக்கத்தில் எங்க வீட்ல நான் சினிமாக்குள்ள வருவதற்கு எதிர்ப்பு இருந்தது" என்றார்.
"முதலமைச்சரும் நடிகர், முன்னாள் துணை முதலமைச்சரும் நடிகர் உங்களுக்கு சிறுவயதில் யார் படங்களைப் பார்க்க பிடிக்கும்" என்று கேட்டதற்கு, "நான் சூர்யா ஃபேன்" என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

















