செய்திகள் :

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' - திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

post image

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ் தி.மு.க ஆட்சியை பாராட்டியிருந்தார்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன்

அப்போது, `தி.மு.க-வில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `பொறுத்திருந்து பாருங்கள்' என சஸ்பென்ஸ் வைத்தார். இந்த நிலையில்தான் இன்று தன் மகன் ரவீந்தரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

இது குறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன், ``ஓ.பி.எஸ்ஸின் இந்த செயல் இது துரோகத்தின் உச்சக்கட்டம். சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பி.எஸ்சை, மறைந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தார்கள்.

அந்த நன்றியை மறந்து புரட்சித் தலைவி சிறை செல்வதற்கும், அதன்பிறகு அவரது மரணத்துக்கும் காரணமாக இருந்த தி.மு.க-வுடன் கைகோர்த்திருப்பது கடைந்தெடுத்த துரோகத்தின் உச்சகட்டம்" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' - தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை' முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். 'இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!' என ஓ.பி.எஸ் கூறினாலும் அவருடன் வந்த ஆதரவாளர்கள் கொஞ்... மேலும் பார்க்க

ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?

அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில... மேலும் பார்க்க

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07

தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலை... மேலும் பார்க்க

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவ... மேலும் பார்க்க