செய்திகள் :

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

post image

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைத்தது.

இந்த நிலையில், இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடங்கியப் போர் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தாக்குதலால் சவுதி அரம்கோவின் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையமும், ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயல்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. போரின் எதிர்வினையாக வர்த்தகத்தின் முக்கிய கப்பல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியிருக்கிறது.

மோடி - புதின்
மோடி - புதின்

அதனால் அங்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் இந்தியக் கப்பல்கள் சிக்கியிருக்கின்றன. எனவே, இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய எரிசக்தி சந்தைக்கு நிம்மதியளிக்கும் வகையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாள் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அமெரிக்க கருவூலத் துறையின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), மார்ச் 5, 2026 நிலவரப்படி கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இந்தியா வாங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 3, 2026 வரை இந்தச் சலுகை நடைமுறையில் இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் விவாதமாகியிருக்கிருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ட்ரம்பின் புதிய விளையாட்டு இது... தன் டெல்லி நண்பரிடம் புதினிடமிருந்து எண்ணெய் பெறலாம் என அனுமதி அளித்திருக்கிறார். இந்த அமெரிக்க மிரட்டல் இன்னும் எவ்வளவு காலம் தொடரும்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியும் மத்திய அரசும் விவசாயம், இந்தியர்களின் தரவுகள், ஜவுளித் துறை என அமெரிக்க ஒப்பந்தம் என இந்தியாவை விற்றுவிட்டீர்கள்" எனக் குறிபிட்டிருந்தார்.

மதுரை எம்.பி.சு வெகங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், ``ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு. நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது. தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு." என விமர்சித்திருக்கிறார்.

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மத்திய கிழக்கு போர் சூழலால், இந்தியாவில் சம... மேலும் பார்க்க

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? - கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது... அது முக்கிய வ... மேலும் பார்க்க

"இந்தியா எங்களது சந்தையை 'இப்படி' பிடிக்க முடியாது; சீனாவிடம் செய்த தவறு இனி இல்லை" - அமெரிக்கா

இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ். அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது..."20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த... மேலும் பார்க்க

`4,000 ஓட்டுக்காக கம்யூனிஸ்ட்டுக்கு தொகுதியை கொடுப்பதா?' - அறிவாலயத்தில் குமுறும் உடன்பிறப்புகள்

இன்றோடு விருப்ப மனுக்களை வாங்கி முடிக்கிறது அறிவாலயம். சீட்டுக்காக உடன்பிறப்புகள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில், 'ஐயா நீங்க சீட்டை கட்சிக்காரன் யாருக்கு வேணா கொடுங்க, ஆனா தொகுதியை மட்டும் கம்ய... மேலும் பார்க்க

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் - பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யே... மேலும் பார்க்க