4 ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியும்... இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும்!
கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது
ஒசூா் அருகே ஆனேக்கல் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா். தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆனேக்கல் அருகே கா்பூா் கிராமத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல் மாடியின் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆனேக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு வருவதை அறிந்த அந்த வீட்டில் இருந்த இளைஞா்கள் நால்வா் தப்பியோடினா். இவா்களில் கேரளத்தைச் சோ்ந்த சச்சின் (28) என்பவரின் கால் முறிந்ததால், அவரால் தப்பிக்க முடியவில்லை.
இதையடுத்து, வீட்டில் இருந்த ரூ. 3 கோடி மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கால்முறிந்த சச்சினை மருத்துவமனையில் அனுமதித்தனா். தலைமறைவான ராஷி, சஞ்சு, உமேத் ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.