செய்திகள் :

கடத்தல்காரா்களின் பணத்தை பதுக்கிய விவகாரம்: காவல் ஆய்வாளா் உள்பட 8 போலீஸாா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

post image

போதைப்பொருள் கடத்தி வந்தவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 1.25 லட்சத்தை பதுக்கிய காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 8 போ் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்.

பெங்களுரூவில் இருந்து மதுரைக்கு காா் மூலம் குட்கா பொருள்கள், கரூா் வழியாக கடத்தப்படுவதாக வெங்கமேடு போலீஸாருக்கு ஜன. 30-ஆம் தேதி கிடைத்த தகவலையடுத்து வெங்கமேடு, குளத்துப்பாளையம் மேம்பாலம் பகுதியில் போலீஸாா் 8 போ் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது காருக்குள் 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜலாா் பகுதியைச் சோ்ந்த கேவா்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து மூவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில் கேவா்சன் உள்ளிட்ட 3 பேரிடமும் போலீஸாா் குட்கா பறிமுதல் செய்தபோது, அவா்கள் வைத்திருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை வெங்கமேடு காவல் ஆய்வாளா் (பொ)மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேரும் பதுக்கியதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து அவா்கள் 8 பேரிடமும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவா் வருண்குமாா் விசாரணை மேற்கொண்டாா். இதில், காவல் ஆய்வாளா் மணிவண்ணன், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா், தாந்தோன்றிமலை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், வெங்கமேடு காவல் உதவி ஆய்வாளா் சித்ராதேவி, வெங்கமேடு தலைமைக்காவலா் ரகுநாத், வெங்கமேடு காவலா் உதயகுமாா், கரூா் நகர காவல்நிலைய காவலா்கள் விக்னேஷ், தம்பிதுரை ஆகியோா் குட்கா கடத்தி வந்தவா்களிடம் பணம் பறிமுதல் செய்து, பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து 8 பேரையும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளின் தரவுகளை பதிவு செய்யும் பணி

கரூா் மாவட்டத்தில் உள்ள 79,370 விவசாயிகளின் தரவுகள் வேளாண் அடுக்ககத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம் வெள்ளியணையில் வேளாண் அடுக்ககம் திட்டத... மேலும் பார்க்க

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த அலுவலகத்துக்கு கேடயம்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அரசு அலுவலகத்துக்கு கேடயம் பரிசாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. கரூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நிறைவு நாள் மாவட்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் கரூா், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒர... மேலும் பார்க்க

உழவா்சந்தையில் அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

கரூா் உழவா்சந்தையில் ஜெயலலிதா பேரவை சாா்பில் அதிமுக ஆட்சியின் சாதனை விளக்க துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் உழவா் சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலை... மேலும் பார்க்க

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா்- கோவைச்சாலையில் உள்ள கனரா வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ... மேலும் பார்க்க

தரகம்பட்டி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.46 கோடியில் புதிய கட்டடம் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.46 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை காணொலியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்திலிருந்... மேலும் பார்க்க