INDIA BLOC: கார்கேவின் திட்டமும் பதறியடித்து வந்த தவெகவும் - பயந்துவிட்டாரா முதல...
கடனை அடைக்க நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்! - தந்தையிடம் ரூ.90 லட்சம் பறிக்க முயன்ற மகன்
பெங்களூருவை சேர்ந்தவர் மணீஷ். சில நிதி பரிவர்த்தனைகளுக்காக கடக் செல்வதாக கூறி விட்டு மணீஷ் பெங்களூரில் உள்ள தனது வீட்டை விட்டு இரவு 11.40 மணிக்கு வெளியேறினார். மேலும் காலையில் மீண்டும் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் சொன்னபடி மணீஷ் காலையில் போனில் அழைக்கவில்லை. ஆனால் காலை 8:30 மணியளவில் மணீஷ் போனில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் அவர்களின் மகன் மணீஷ் கடத்தப்பட்டுள்ளதாகவும் ரூ. 90 லட்சம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று கூறி மிரட்டினர்.
இது குறித்து மணீஷ் தந்தை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் இது குறித்து கடத்தல் வழக்கு பதிவு செய்து அவரை தேட ஆரம்பித்தனர். வாட்ஸ் ஆப் அழைப்பு செய்த போன் நம்பரை ஆப் செய்து இருந்தனர்.

அதே சமயம் வேறு ஒரு நம்பரில் இருந்து மீண்டும் மணீஷ் தந்தையை அழைத்து பணம் தயாராகிவிட்டதா என்று கேட்டனர். உடனே அந்த போன் எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆய்வு செய்தபோது அது ஹசன் அருகில் உள்ள பேலூர் என்ற கிராமத்தை காட்டியது.
உறங்கிக்கொண்டிருந்த மணீஷ்
இதையடுத்து போலீஸார் அந்த கிராமத்திற்கு சென்றபோது மணீஷ் உறங்கிக்கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் இரண்டு பேர் அங்கு இருந்தனர். அவர்களை போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் மணீஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கடத்தல் நடந்தது தெரியவந்தது. மனிஷ் தனது தந்தையை ஏமாற்றி கடனை அடைப்பதற்காக அவரிடமிருந்து பணத்தைப் பெறுவதற்காக தனது சொந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.
மணீஷ் வேறொரு தொழிலில் பணத்தை இழந்ததாகவும், கடனை அடைக்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். எனவே வேறு வழியில்லாமல் தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb


















