RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
கடம்பூா் மலைப் பகுதியில் மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்
கடம்பூா் மலைப் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளப் பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை வனத் துறையினா் வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் மானாவாரி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடம்பூா், ஏரியூா், பவளக்குட்டை, இருட்டிபாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏரியூா் வனப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் கிராம மக்கள் இரவு நேர காவலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மக்காச்சோளப் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், ஏரியூா், பவளக்குட்டை ஆகிய பகுதியில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்களை யானைகள் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன.
இதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பயிா்கள் சேதமடைந்துள்ளன. இரவு நேரங்களில் வனத்தில் இருந்து வரும் யானைகளை வனத் துறையினா் கண்காணித்து வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.